புதன்கிழமை, ஜனவரி 15, 2025

விஜய்யை விட பல மடங்கு உயர்ந்த மகேஷ் பாபு.. இவங்கள வச்சுக்கிட்டு ஆணிய புடுங்க முடியாது

Vijay-Mahesh Babu: அண்மைக்காலமாகவே விஜய் பெயர் பல சர்ச்சைகளில் அடிபட்டுக் கொண்டிருக்கிறது. அதிலும் லியோ ட்ரெய்லர் விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில் தற்போது மற்றொரு பிரச்சனையும் தலை தூக்கி உள்ளது. ரிலீஸ் தேதி நெருங்கும் வேளையில் இது அனைத்தும் அவருக்கு மிகப்பெரும் பின்னடைவாகவும் அமைந்திருக்கிறது.

அது மட்டுமல்லாமல் அவருடைய அரசியல் ஆசைக்கும் பேரடியாக மாறியுள்ளது. அதாவது சமீபத்தில் லியோ ட்ரெய்லர் வெளியான போது ரோகிணி தியேட்டரில் விஜய் ரசிகர்கள் செய்த அட்டகாசம் அனைவரும் அறிந்தது தான். இதன் மூலம் இவர்கள் எல்லாம் ரசிகர்களா இல்லை ரவுடிகளா என்ற விவாதமும் ஒரு பக்கம் எழுந்துள்ளது.

Also read: ஜெயிலர் வசூலை முந்தியே ஆகணும் எனக் கூறிய லலித்.. அசர வச்ச மாதிரி பதிலடி கொடுத்த லோகேஷ்

விஜய் அரசியலுக்கு வரும் நேரத்தில் இது போன்ற சம்பவங்கள் அவருடைய பெயரை ரொம்பவே டேமேஜ் செய்திருக்கிறது. அது மட்டுமல்லாமல் இவர்களை எல்லாம் நம்பியா அவர் களத்தில் குதிக்கப் போகிறார் என்ற பேச்சும் பரவிக் கொண்டிருக்கிறது. மேலும் ரசிகர்களால் நஷ்டத்தை சந்தித்த தியேட்டருக்கு விஜய் என்ன செய்தார் என்ற கண்டன குரல்களும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

இதே போன்ற ஒரு சம்பவம் தான் தெலுங்கு திரை உலகிலும் நடந்தது. அதாவது மகேஷ்பாபுவின் தீவிர ரசிகர்கள் இப்படித்தான் ஒருமுறை தியேட்டரை நாசம் செய்திருக்கின்றனர். ஆனால் அவரோ இந்த விவகாரத்தில் தலையிட்டு மன்னிப்பு கேட்டது மட்டும் இன்றி தியேட்டர் ஓனருக்கு நஷ்ட ஈடையும் கொடுத்து சரி படுத்தி இருக்கிறார்.

Also read: விஜய், லோகேஷ் சண்டையில் சிக்கிய விக்கி.. பகிரங்கமாக கேட்ட மன்னிப்பு

அப்படி ஒரு விஷயத்தை விஜய் செய்யாதது தான் பலருக்கும் ஏமாற்றமாக இருக்கிறது. ஏனென்றால் மகேஷ்பாபுவின் பல படங்களை விஜய் இங்கு ரீமேக் செய்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் தற்போது அவரின் குண்டூர் காரம் படத்தில் நடித்து வரும் மீனாட்சி சவுத்ரியையும் தனக்கு ஜோடியாக தளபதி 68-ல் நடிக்க கமிட் செய்திருக்கிறார்.

இப்படி மகேஷ் பாபுவை காப்பி அடித்தால் மட்டும் போதாது சில விஷயங்களுக்கு வாயை திறக்கணும் என அவருக்கு எதிராக கருத்துக்கள் கிளம்பியுள்ளது. இவ்வாறாக புதுப்புது ஏழரை தொடர்ந்து வரும் நிலையில் விஜய் தரப்பிலிருந்து விரைவில் இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

Also read: லோகேஷ், நெல்சன் தான் எனக்கு தெய்வம் மாதிரி தெரியுறாங்க.. பகிரங்கமாக ஒப்புக்கொண்ட லாரன்ஸ் மாஸ்டர்

Trending News