வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

கோட் படம் ரிலீஸ் ஆகுற வர இவங்க யாரையும் பேட்டி எடுக்காதீங்க.. புலம்பும் விஜய் ரசிகர்கள், செஞ்ச சம்பவம் அப்புடி!

GOAT: இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் விஜய் இணைகிறார் என்று தெரிந்ததுமே அவருடைய ரசிகர்களுக்கு கொஞ்சம் வயிற்றில் புளியை கரைக்க தான் செய்தது. வெங்கட் பிரபு எதையுமே சீரியஸாக எடுக்காமல் ஜாலியாக இருக்கும் நபர்.

விஜய் வாய்விட்டு சிரிப்பதையே பார்ப்பது அரிதிலும் அரிது. இவர்களுடைய கூட்டணி எப்படி இருக்கும் என தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பெரிய சந்தேகம் இருந்தது. ஆனால் விஜய் ரசிகர்களுக்கு திருப்தி கொடுக்கும் வகையில் வெங்கட் பிரபு கோட் படத்தை எடுத்திருப்பது ட்ரெய்லர் பார்க்கும் போதே தெரிகிறது.

இருந்தாலும் விளையாட்டு பசங்களை வெச்சிட்டு வெங்கட் பிரபு படத்தை இயக்கியிருப்பது தான் எல்லோருக்கும் ஆச்சரியம். படம் எல்லாம் முடிந்த கையோடு வெங்கட் பிரபு & கோ அவர்களுடைய வேலையை ஆரம்பித்து விட்டார்கள்.

புலம்பும் விஜய் ரசிகர்கள்

ஏற்கனவே படம் முடிந்த கையோடு வெங்கட் பிரபுவிடம் முக்கிய பத்திரிகை நிறுவனம் ஒன்று இன்டர்வியூ எடுத்து இருந்தது. அதில் மனுஷன் அசால்ட் ஆக ஒக்காந்து மொத்த படத்தின் கதையையும் சொல்லிவிட்டார். போதாத குறைக்கு இவருடைய பாசறையில் இருந்து அடுத்தடுத்து வருபவர்கள் கொடுக்கும் பேட்டி படத்தின் சுவாரசியத்தை குறைக்கும் வகையில் இருக்கிறது.

வெங்கட் பிரபு, பிரேம்ஜி, வைபவ் மற்றும் அரவிந்த் ஆகியோர் நேற்று அடுத்தடுத்து கொடுத்த இன்டர்வியூகள் தூக்கி வாரி போடும் அளவுக்கு இருக்கிறது. பிரேம்ஜி ஒரு பக்கம் விஜய்க்கும் அவருக்கும் ஆன ட்ராக் எப்படி இருக்கும் என்பதை சொல்லிவிட்டார்.

அது மட்டும் இல்லாமல் படத்தின் முதல் 60 நிமிட காட்சியை புட்டு வைத்து விட்டார். இன்னொரு பக்கம் வைபவ் தனக்குத் தெரிந்த கதை எல்லாம் சமீபத்திய பேட்டி ஒன்றில் அவிழ்த்து விட்டு விட்டார். பட ரிலீஸ் க்கு இன்னும் இரண்டு நாட்கள் இருக்கும் நிலையில் இவர்கள் சேனலுக்கு சேனல் உட்கார்ந்து படத்தின் கதையை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

படம் ரிலீஸ் ஆன அன்று யாராவது ஸ்பாய்லர் சொன்னாலே கோபம் தலைக்கேறிவிடும். ஆனால் இந்த கூட்டம் ரிலீசுக்கு முன்னாடியே இப்படி உட்கார்ந்து இஷ்டத்துக்கு பேசிக் கொண்டிருக்கிறார்கள். தயவுசெய்து கோட் படம் ரிலீசாகும் வரை இவங்க யாரையும் பேட்டி எடுக்காதீங்க என்று தளபதி ரசிகர்கள் புலம்பி வருகிறார்கள்.

இணையத்தை கலக்கும் கோட்

Trending News