திங்கட்கிழமை, டிசம்பர் 30, 2024

தளபதி 65 படத்தை மறந்த விஜய் ரசிகர்கள்.. சோகத்தில் கடையை மூடிய சன் பிக்சர்ஸ்

கடந்த சில மாதங்களுக்கு முன்பு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய தளபதி65 படத்தை பற்றி பேச்சு மூச்சு இல்லாததால் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அப்செட்டில் உள்ளதாம். அதற்குக் காரணமும் இருக்கிறது. மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய் அடுத்ததாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வீடியோவுடன் வெளியிட்டனர்.

இந்த அறிவிப்பு வெளியானதும் இணையதளத்தில் காட்டு தீப்பற்றிக் கொண்டது போல தளபதி ரசிகர்கள் தளபதி 65 படத்தை கொண்டாடித் தீர்த்தனர். ஆனால் அதன்பிறகு சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடமிருந்து எந்த ஒரு தகவலும் இல்லை.

இதற்கு இடையில் தளபதி 66 படத்தைப் பற்றிய செய்திகள் தற்போது இணையதளங்களில் அதிகமாக பேசப்பட்டு வருகின்றன. அதற்கு காரணம் மீண்டும் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் உள்ளே வந்தது தானாம்.

மெர்சல் படத்தின்போது தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் எப்படி ப்ரமோஷன் செய்தது என்பது அனைவருக்குமே தெரியும். அதுமட்டுமில்லாமல் ரசிகர்களின் கோரிக்கைக்கு ஏற்ப அவ்வப்போது புகைப்படங்கள், அப்டேட் ஆகியவற்றை வெளியிட்டு ரசிகர்களை கொண்டாட வைத்தனர்.

இந்நிலையில் தளபதி 66 படத்தில் மீண்டும் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் விஜய் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருப்பதை ரசிகர்கள் பெருமளவு வரவேற்றனர். அதற்கு முன்னதாக சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் தளபதி 65 படத்தைப் பற்றிய பேச்சுக்கள் குறைவாக உள்ளது.

vijay-cinemapettai
vijay-cinemapettai

மேலும் தளபதி 66 படத்தில் மீண்டும் லோகேஷ் கனகராஜ் இணைய உள்ள செய்தியும் ரசிகர்களை கொண்டாட வைத்தது. இதற்கிடையில் நான் ஒருத்தன் இருக்கேன்டா? என நெல்சன் கூறுமளவுக்கு தளபதி 65 படத்தை சுத்தமாக மறந்து விட்டார்களாம் ரசிகர்கள். ஏதாவது ஒரு அப்டேட் விடுங்கப்பா!

Trending News