நடிகர் விஜய் நடிப்பில் வருகிற பொங்கலுக்கு வெளிவரவுள்ள திரைப்படம் மாஸ்டர். இப்படத்தினை திரையில் பார்ப்பதற்கு ரசிகர்கள் வெகுவாக காத்திருக்கின்றனர். அதுமட்டுமில்லாமல் தினமும் படத்தின் ப்ரமோஷன் வீடியோ வெளியிட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி வருகின்றனர்.
திரையரங்குகள் செயல்படலாம் என அறிவித்ததையடுத்து மாஸ்டர் திரைப்படம் வெளியாகும் என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. அதனால் தியேட்டரில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நாட்களிலேயே அதிகமான டிக்கெட்கள் முன்பதிவு செய்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
இப்படி இருக்கும் நிலையில் சென்னையில் பிரபல ரோகினி தியேட்டரில் மாஸ்டர் திரைப் படத்திற்கான டிக்கெட் முன்பதிவு நடைபெற்றது. அப்போது டிக்கெட் வாங்குவதற்கு அலைகடலென திரண்ட ரசிகர்கள் முககவசம் எதுவும் அணியாமல், சமூக இடைவெளி இல்லாமல் டிக்கெட் வாங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதுமட்டுமில்லாமல் நாளுக்கு நாள் கொரானா தொற்று அதிகரித்து வரும் நிலையில் முககவசம் அணியாமல் ரசிகர்கள் டிக்கெட் வாங்கிய சம்பவம் சுகாதாரத் துறையினர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டிக்கெட் வாங்கும் போதே ரசிகர்கள் சமூக இடைவெளி இல்லாமல் உள்ளனர், இதை தாண்டி படம் பார்க்கும் போது இவர்கள் எப்படி சமூக இடைவெளியை விட்டு படம் பார்ப்பார்கள் என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.
இதனால் சமூக ஊடக வாசிகள் மற்றும் சுகாதாரத் துறையினர் அன்பு வேண்டுகோளாக அனைவரும் எங்கு செல்வதாக இருந்தாலும் முக கவசம் அணிந்து செல்லுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.