மாஸ்டர் படத்தைப் பொருத்தவரை லோகேஷ் கனகராஜ் கூறிய அனைத்துமே பொய் என்பது இரண்டாவது ப்ரோமோ வீடியோவிலேயே தெரிய வந்துள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் முதல் முறையாக உருவாகி பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம் மாஸ்டர். படம் முடிந்து ஆறு மாதங்கள் கழித்து தற்போது தான் ரிலீஸ் தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது சம்பந்தமாக லோகேஷ் கனகராஜ் மற்றும் மாஸ்டர் பட குழுவினருடன் தொடர்ந்து பல யூடியூப் சேனல்கள் மற்றும் டிவி சேனல்கள் பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். அனைத்து பேட்டிகளிலும் லோகேஷ் கனகராஜ் 28 வருட சினிமா வாழ்க்கையில் விஜய் பின்பற்றி வந்த பாணியை இந்த படத்தில் சுத்தமாக பின்பற்றவில்லை என கூறியிருந்தார்.
அதாவது வழக்கமான விஜய் படங்களில் இருக்கும் மாஸ் காட்சிகள், பஞ்ச் வசனங்கள், தேவையில்லாத சீன்கள் ஆகியவை மாஸ்டர் படத்தில் இருக்காது எனவும், கதையிலேயே மாஸ் சம்பந்தப்பட்ட விஷயங்கள் இருக்கும் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மாஸ்டர் படத்தில் வாத்தி கமிங் பாடல் ப்ரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இரண்டாவதாக விஜய் டயலாக் பேசிய ப்ரோமோ வெளியானது. அதில் விஜய், முடிஞ்சா தொட சொல்றா பார்ப்போம் என்று பேசிய டயலாக் இந்திய அளவில் ட்ரெண்டிங் ஆனது குறிப்பிடத்தக்கது.
அந்த ப்ரோமோவில் கன்னத்தில் கை வைத்து நெட்டை எடுக்கும் ஸ்டைல் ஒன்றை விஜய் செய்திருப்பார். இதை விஜய்யின் டிரேட்மார்க் ஸ்டைல் என்று கூட சொல்லலாம். ஆனால் அதை துப்பாக்கி படத்திலிருந்து மாஸ்டர் படம் வரை தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இந்த வாக்குவாதம் தான் இணைய தளங்களில் சென்று கொண்டிருக்கிறது. இதுவரை இல்லாத விஜய்யை பார்ப்போம் என நம்பிக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது இந்த புரோமோ. இதை லோகேஷ் கனகராஜ் செய்யச் சொன்னாரா, அல்லது தனது ரசிகர்களுக்கு பிடிக்கும் என்று விஜய்யே செய்தாரா என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.