தென்னிந்திய சினிமாவில் உள்ள ஒட்டுமொத்த ரசிகர்களையும் வியப்பில் ஆழ்த்திய செய்தி என்னவென்றால் சமீபத்தில் தளபதி விஜய் அடுத்ததாக நடிக்கவிருக்கும் படத்திற்கு 120 கோடி சம்பளம் வாங்கும் செய்திதான்.
விஜய் தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு முதலில் 100 கோடி சம்பளம் பேசப்பட்ட நிலையில் பிறகு கொரானா காரணம் காட்டி 80 கோடி சம்பளத்துடன் முடிக்கப்பட்டது என்கிறார்கள். இன்னும் சிலரோ விஜய் 100 கோடி சம்பளம் தான் வாங்கப் போகிறார் எனவும் கூறுகின்றனர்.
இப்படி பீஸ்ட் பட விஷயத்திலேயே எந்த ஒரு தெளிவும் இல்லாமல் இருக்கும் இந்த நேரத்தில் திடீரென விஜய் அடுத்ததாக நடிக்கும் தளபதி 66 படத்திற்காக பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனத்திடம் 120 கோடி சம்பளம் பேசியுள்ளதாக செய்திகள் வெளியாகி வைரலானது.
இந்த செய்தி இரண்டு மூன்று நாட்கள் சமூக வலைதளத்தை ஆட்சி செய்தது என்று சொன்னால் மிகையாகாது. ஏற்கனவே இப்படித்தான் பிகில் படம் 300 கோடி வசூல் செய்தது என்று சொன்னதால் விஜய்யின் வீட்டுக்கு ரெய்டு விட்டு மாஸ்டர் படப்பிடிப்பிலிருந்து பாதியிலேயே அழைத்து வரப்பட்டு விஜய்யை ஏகப்பட்ட டார்ச்சர் செய்தார்கள்.
மேலும் பிகில் படத்திற்காக விஜய்க்கு 50 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டதாகவும், படம் 300 கோடி வசூல் செய்யப் பட்டதாகவும் வருமான வரித்துறையினரே அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டுச்சென்றனர். சமீபத்தில்கூட விஜய் தன்னுடைய சொகுசு காருக்கு வரி கட்டவில்லை என்ற செய்தி வைரல் ஆனது.
இப்படி திரும்பிய பக்கமெல்லாம் பண விஷயத்தில் விஜய்க்கு ஏகப்பட்ட சிக்கல்கள் வரும் நேரத்தில் இந்த 120 கோடியை காரணம் காட்டி மறுபடியும் எந்த சந்திலிருந்து எங்கே ரெய்டு வரப்போகிறார்களோ என்ற பதட்டத்தில் உள்ளாராம் விஜய். என்னதான் சரியாக வரி கட்டியிருந்தாலும் இந்த மாதிரி ரெய்டு என்ற தெரிஞ்சாலே விஜய் பெயரை கெடுக்க ஒரு கூட்டம் வேலை செய்கிறது. அதைத்தான் எப்படி சமாளிக்கப் போகிறோமோ? என்ற கவலையாம் விஜய்க்கு.