பிரபாஸுடன் மோதும் விஜய் பட வில்லன்.. பாகுபலிக்கு ஏத்தா ஆள் தான்!

Prabhas : பாகுபலி படத்தின் மூலம் ஒட்டு மொத்த சினிமாவையும் திரும்பி பார்க்க வைத்தவர் தான் பிரபாஸ். இவர் தொடர் தோல்விக்கு பிறகு இப்போது தான் தனது செகண்ட் இன்னிங்ஸ் தொடங்கி இருக்கிறார்.

அந்த வகையில் அவர் நடித்த சலாம் படம் வெற்றி பெற்ற நிலையில் கல்கி 2898 ஏடி படமும் பெரும் வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து சலாம் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார்.

மேலும் ராஜா சாப், ஸ்பிரிட் ஆகிய படங்கள் கைவசம் இருக்கிறது. இதைத்தொடர்ந்து அனிமல் படத்தை சந்தீப் ரெட்டி இயக்குகிறார். இந்த படத்தில் விஜய் பட வில்லன் தான் பிரபாஸுக்கும் வில்லனாக நடிக்க இருக்கிறார்.

பிரபாஸுக்கு வில்லனாகவும் விஜய் பட நடிகர்

அதாவது மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களில் வில்லனாக மிரட்டு இருந்தார் விஜய் சேதுபதி. அதற்கு நேர் எதிராக மகாராஜா படத்தில் அன்பைக் கொட்டி நடித்திருந்தார். அவ்வாறு கதைக்கு ஏத்த மாதிரி தன்னை மெருகேற்றி வருகிறார்.

அந்த வகையில் பாகுபலியான பிரபாஸுடன் மோத இருக்கிறார். இதில் ஹீரோவை காட்டிலும் வில்லனின் கதாபாத்திரம் தான் ஸ்கோர் செய்யும் என்று கூறப்படுகிறது. ஆகையால் மாஸ்டர் பவானி, விக்ரம் சந்தனம் ஆகிய கேரக்டர்களை மறக்கும் அளவுக்கு இந்த படம் இருக்க உள்ளது.

தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். இது தவிர சில படங்களில் நடித்து வரும் இவர் விரைவில் பிரபாஸ் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளார்.

Leave a Comment