திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

80 லட்சத்தை இழந்த விஜய் பட நடிகை.. கூடவே இருந்து குழி பறித்த மேனேஜர்

Actor Vijay: தளபதி விஜய்யுடன் ஒரு படத்திலாவது ஜோடி போட்டு நடித்து விட வேண்டும் என்பது பல நடிகைகளின் கனவாக இருக்கிறது. அந்த வகையில் இப்போது லியோ படத்தில் 14 வருடம் கழித்து திரிஷா ஜோடி போட்டு நடிக்கிறார். அதற்கு அடுத்தபடியாக தளபதி 68 படத்தில் யார் ஹீரோயின் என்பது இப்போது இணையத்தில் பல நடிகைகளின் பெயர் உலாவிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் தன்னுடைய சினிமா வாழ்க்கையில் ஒரு படத்தில் ஆவது விஜய்யுடன் நடித்து விட வேண்டும் என்ற கனவுடன் இருந்தவர் ராஷ்மிகா மந்தனா. வம்சி இயக்கத்தில் உருவான வாரிசு படத்தின் மூலம் அந்த கனவு நிறைவேறியது. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் ராஷ்மிகாவுக்கு ரசிகர்கள் அதிகம் உள்ளனர்.

Also read: விஜய்யை ஆட்டி படைக்கும் அந்த பெரும்புள்ளி.. தலையாட்டி பொம்மை போல் சொன்னதைச் செய்யும் தளபதி

மேலும் விஜய் தேவர்கொண்டா உடன் சில படங்களில் ராஷ்மிகா ஜோடி போட்டு நடித்திருந்தார். இதன் மூலம் இவர்களுக்குள் காதல் ஏற்பட்டு தற்போது டேட்டிங் செய்து வருவதாக தகவல் வெளியாகி வருகிறது. அதுமட்டுமின்றி இவர்கள் ஒன்றாக ஹோட்டலுக்கு செல்லும் புகைப்படமும் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி கொண்டிருக்கிறது.

இந்த சூழலில் ராஷ்மிகா அதிர்ச்சி தரும் ஒரு தகவலை கூறியிருக்கிறார். அதாவது தன்னுடைய ஆரம்ப காலத்தில் இருந்தே மேனேஜராக வேலை பார்த்து வருபவர் கிட்டதட்ட 80 லட்சம் மோசடி செய்துள்ளதாக கூறியிருக்கிறார். இத்தனை நாள் கூடவே இருந்து குழிப்பறித்துள்ளார் ராஷ்மிகாவின் மேனேஜர்.

Also read: விஜய்க்கு போட்டியாக களம் இறங்கிய சூர்யா.. சைலண்டாக நடந்த மீட்டிங்

இந்த விஷயம் தெரிந்த உடன் உடனடியாக மேனேஜரை நீக்கிவிட்டாராம். ஆனால் அவர் மீது கொஞ்சம் தயவு தாட்சனை பார்த்து போலீஸ் கம்ப்ளைன்ட் எதுவும் கொடுக்காமல் இருக்கிறார் ராஷ்மிகா. மேலும் பல வருடமாக தன்னுடன் இருந்த மேனேஜர் இவ்வாறு செய்துள்ளது ராஷ்மிகாவை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் நம்பிக்கை தரும் வகையில் புதிய மேனேஜரை ராஷ்மிகா நியமிக்க இருக்கிறார். இப்போது இவருக்கு தமிழ், தெலுங்கு மற்றும் பாலிவுட்டிலும் பட வாய்ப்பு வந்துகொண்டு இருக்கிறது. ஒரு படத்திற்கு கிட்டத்தட்ட 5 கோடி வரை ராஷ்மிகா சம்பளமாக பெற்று வருகிறார். இவ்வாறு சினிமாவில் உயரத்தை அடையும் போது நம்பகத் தகுந்த நபர்களை சுற்றி வைத்திருப்பது மிகவும் அவசியம்.

Also read: பாபா படத்துடன் திருந்திய ரஜினி.. திருந்தாமல் நாடகமாடும் விஜய்

Trending News