வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

பிரபல தயாரிப்பாளர் பிடியில் சிக்கி தவித்த விஜய் பட நடிகைகள்.. பல வருடம் கழித்து வெளியான உண்மை

பலருக்கும் ஆச்சரியம் அளிக்கும் விதமாக ஒரு உண்மைச் செய்தி பல வருடங்கள் கழித்த வெளியாகி உள்ளது. அதாவது விஜய் படத்தில் நடித்த இரண்டு நடிகைகள் பண நெருக்கடியால் பிரபல தயாரிப்பாளர் ஒருவர் பிடியில் சிக்கித் தவித்ததாக சினிமா விமர்சகர் வலைப்பேச்சு பிஸ்மி கூறி உள்ளார்.

அதாவது செல்வ பாரதி இயக்கத்தில் 1998 இல் வெளியான படம் நினைத்தேன் வந்தாய். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ரம்பா மற்றும் தேவயானி இருவரும் நடித்திருந்தனர். இப்படத்தில் இடம் பெற்ற பாடல் மற்றும் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

Also Read :நீங்க அப்படி செஞ்சா, நாங்க இப்படி செய்வோம்.. விஜய்க்கு போட்டியாக விஜய் டிவி பிரபலங்கள் செய்த காரியம்

இப்படத்திற்குப் பிறகு தேவயானி, ரம்பா இருவருக்குமே சினிமாவில் அடுத்தடுத்த பட வாய்ப்பு வந்து டாப் நடிகர்களுடன் ஜோடி போட்ட நடித்து வந்தனர். அவர்களது கெட்ட காலம் என்று தான் சொல்ல வேண்டும் படம் தயாரிக்க வேண்டும் என்ற ஆசை அவர்களுக்கு வந்துள்ளது.

கடந்த 2003இல் ரம்பா, லைலா, ஜோதிகா ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் 3 ரோசஸ். இப்படத்தை ரம்பா சொந்தமான தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்து இருந்தார். ஆனால் இந்த படம் எதிர்பார்த்த அளவு போகாமல் நஷ்டத்தை சந்தித்துள்ளது.

அதேபோல் தேவயானி தனது கணவர் ராஜகுமாரன் இயக்கத்தில் உருவான காதலுடன் என்ற படத்தை தயாரித்திருந்தார். இப்படத்தில் முரளி, தேவயானி, அப்பாஸ் ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படமும் படுமோசமான தோல்வியை அடைந்தது. இப்படமும் 2003 இல் தான் வெளியானது.

Also Read :அந்த மாதிரி கவர்ச்சியில் ரம்பாவை தூக்கி சாப்பிட்ட திருட்டு பயலே மாளவிகா.. வைரலாகும் பீச் புகைப்படம்!

இந்நிலையில் தேவயானி மற்றும் ரம்பா இருவருமே தற்போது பிரபல தயாரிப்பாளராக இருக்கும் ஒருவரிடம் கடனாக பணத்தை பெற்று தான் இந்த படத்தை எடுத்துள்ளனர். ஆனால் எதிர்பாராத விதமாக இந்த படங்கள் நஷ்டமடைந்ததால் கொடுத்த தேதியில் பணத்தை கொடுக்க முடியாமல் போய் உள்ளது.

அதன் பின்பு அந்த தயாரிப்பாளர் அவரின் சொந்த ஊருக்கு இவர்களை அழைத்து கஸ்டடியில் வைத்துள்ளார். பணத்தை கொடுத்த பிறகு தான் இவர்களை விடிவித்துள்ளார். யாரும் அறியாத இந்த தகவல் பல வருடங்களுக்கு கழித்து தற்போது வெளியாகி உள்ளது.

Also Read :அட ஆறடி வளர்ந்த நடிகர் கூட ஐட்டம் டான்ஸ் ஆடிய தேவயானி.. எந்த படம் தெரியுமா.?

Trending News