சினிமா பிரபலங்கள் என்ன செய்தாலும் அதை மீடியா மிக விரைவில் பெரிதாகிவிடும். அந்த வகையில் தமிழ் சினிமாவிற்கு தளபதி விஜய்யின் குஷி படத்தில் மேக்கொரீனா என்ற பாடலுக்கு நடனம் ஆடியதன் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி. இவர் 15 ஆண்டுகளுக்கு முன்பு பொதுமேடையில் அனாகரிமாக நடந்து கொண்டதாக போடப்பட்ட வழக்கிற்கு தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதாவது ஷில்பா ஷெட்டி கடந்த 2007ம் ஆண்டு ராஜஸ்தானில் நடைபெற்ற எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கும் போது, ஐநா சபையின் எய்ட்ஸ் நோயாளிகளுக்கான சிறப்பு தூதராக நியமிக்கப்பட்ட பிரபல ஹாலிவுட் நடிகர் ரிச்சர்ட் கேர் என்பவர் ஷில்பா ஷெட்டியை பொதுமேடையில் கட்டி அணைத்து முத்தமிட்டுள்ளார்.
இந்த நிகழ்வு அந்த சமயம் வைரலாகப் பேசப்பட்டது. அத்துடன் பொது மேடையில் அநாகரிகமாக நடந்து கொண்ட ரிச்சர்ட் கேர் மற்றும் ஷில்பா ஷெட்டி இருவரின் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால் சம்பந்தப்பட்ட இருவரும் ஒன்றும் நடக்காததுபோல் எதார்த்தமாக எடுத்துக்கொண்டனர்.
இருப்பினும் இந்த வழக்கு கடந்த 2017ம் ஆண்டு ராஜஸ்தானில் இருந்து மும்பை நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. கடந்த 15 ஆண்டுகளாக இழுபறியில் செய்து கொண்டிருந்த இந்த வழக்கில் தற்போது மும்பை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை உத்தரவிட்டுள்ளது.
அதாவது, ஷில்பா ஷெட்டி குற்றவாளி அல்ல என்றும் அவர் பாதிக்கப்பட்ட நபர் ஆகவே கருதப்படுகிறார். எனவே முதல் குற்றவாளியான ஹாலிவுட் நடிகர் ரிச்சர்ட் கேர், ஷில்பா ஷெட்டியை வலுக்கட்டாயமாக முத்தமிட்டுள்ளார்.
ஆகையால் ஷில்பா ஷெட்டி குற்றமற்றவர் என்று நீதிபதி இந்த வழக்கிற்கு அதிரடி தீர்ப்பை அளித்துள்ளார். பல ஆண்டுகளாக நீடித்துக் கொண்டிருந்த இந்த வழக்கில் ஷில்பா ஷெட்டி குற்றமற்றவர் என்று விடுவித்து இருப்பது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பேசப்படுகிறது.