செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

விஜய் கலெக்ஷன் அள்ளிய முதல் 50, 100 கோடி படங்கள்.. வசூல் மன்னனாக கிடைத்த அங்கீகாரம்

நடிகர் விஜய் என்றாலே பாக்ஸ் ஆபீஸ் கிங் என இப்போது ஆகி விட்டார். விஜய் படத்திற்கு நேர்மறை விமர்சனங்களோ இல்லை எதிர்மறை விமர்சனங்களோ பாக்ஸ் ஆஃபிஸில் வசூல் அள்ளிவிடும் . விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் வெளிவந்த பீஸ்ட் திரைப்படம் உலக அளவில் 200 கோடிக்கு மேல் வசூல் செய்தது.

விஜய்க்கு வில்லு, புலி, சுறா போன்ற திரைப்படங்கள் பெரிதாக கை கொடுக்கவில்லை. விஜய்யின் படங்களை தயாரிக்க கூடாது என தயாரிப்பாளர்கள் சங்கம் ‘ரெட் கார்ட்’ கொடுக்கும் அளவிற்கு சென்றது. ஆனால் இப்போது தளபதி விஜயின் படங்கள் தான் கோலிவுட்டில் அதிக வசூலை தருகின்றன. விஜய்க்கு முதன் முதலில் 50 கோடி, 100 கோடி வசூல் கொடுத்த முதல் திரைப்படங்கள்.

Also Read: தமிழ் ராக்கர்ஸ்-க்கு வலை விரித்து விஜய்யை அசிங்கப்படுத்திய படக்குழு.. அப்படி என்னதான் கோவமோ!

கில்லி: 2004 ஆம் ஆண்டு இயக்குனர் தரணி இயக்கத்தில், AM ரத்னம் தயாரிப்பில் ‘ஒக்கடு’ என்னும் தெலுங்கு பட ரீமேக்கில் உருவான படம் ‘கில்லி’. இது விஜயின் சினிமா கேரியரில் மிக முக்கியமான திரைப்படம். விஜய், த்ரிஷா, பிரகாஷ்ராஜ், ஆசிஷ் வித்யார்த்தி, தாமு நடித்த இந்த திரைப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்தார்.

இந்த படம் தான் விஜய்க்கு முதன் முதலில் 50 கோடி வசூல் வெற்றி கொடுத்த திரைப்படம். 1999 ஆம் ஆண்டு வெளியான படையப்பா திரைப்படத்தின் வசூலுக்கு பிறகு, தமிழ் சினிமாவில் அதிக வசூலை கொடுத்த திரைப்படம் கில்லி.

Also Read: இப்போதைக்கு வாய்ப்பில்லை ராஜா.. வெற்றிமாறனை டீலில் விடும் விஜய்

துப்பாக்கி: இயக்குனர் AR முருகதாஸ் இயக்கத்தில், கலைப்புலி தாணு தயாரிப்பில் 2011 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘துப்பாக்கி’. விஜய், காஜல் அகர்வால், ஜெயராம், சத்யன் நடித்த இந்த திரைப்படத்தில் விஜய் ராணுவ வீரராக நடித்திருப்பார்.

உலக அளவில் இந்த படம் 125 கோடிக்கு மேல் வசூல் செய்தது. இந்த படத்திற்கு பல இஸ்லாம் இயக்கங்கள் பல எதிர்ப்புகளை தெரிவித்தன. அதைத்தாண்டி இந்த படம் உலக அளவில் ரிலீசானது. அதன் பிறகு வெளியான கத்தி 160 கோடியும், தெறி 170 கோடியும் , பைரவா ரிலீசான 5 நாளிலே 100 கொடியும், மெர்சல் படம் 3 நாளில் 100 கொடியும் வசூல் செய்தது.

Also Read: பிரசாந்த் படத்தை தவறவிட்ட விஜய்.. தளபதி நடிச்சிருந்தா செமையா இருந்திருக்கும்

Trending News