TVK-Vijay: விஜய் தன்னுடைய அரசியல் கட்சியை அறிவித்ததில் இருந்து சில பல சர்ச்சைகளை எதிர் கொண்டு வருகிறார். ஆனாலும் அவருடைய அடுத்தடுத்த நகர்வு அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பு கலந்த சலசலப்பை ஏற்படுத்திக் கொண்டிருப்பது என்னவோ உண்மை தான்.
அதேபோல் அரசியலுக்காக பல காலம் தன்னை தயார்படுத்திக்கொண்டு களமிறங்கியுள்ள இவர் சர்ச்சைகளை எதிர்கொள்ளும் மனநிலையில் தான் இருக்கிறார். அது அவருடைய சமீப கால நடவடிக்கைகளின் மூலம் தெரிகிறது.
ஆனால் அவருடைய தலைமை தடுமாறுகிறதா என்ற கேள்வியும் இப்போது எழுந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் அவருடைய முதல் மாநில மாநாடு தான். வரும் அக்டோபர் 27ஆம் தேதி மாநாடு நடைபெறும் என விஜய் சமீபத்தில் அறிவித்திருந்தார்.
விமர்சனமாக மாறிய கட்சி மாநாடு
இதற்கு முன்பே செப்டம்பர் மாத இறுதியில் தான் இந்த நிகழ்வு நடைபெறுவதாக இருந்தது. ஆனால் அனுமதியும் உள்ளிட்ட விஷயங்களில் ஏற்பட்ட தாமதம் தான் மாநாடு தள்ளி போவதற்கு காரணம். ஆனால் மீண்டும் அது தள்ளிப்போகும் என்ற பேச்சு எழுந்துள்ளது.
ஏனென்றால் தீபாவளிக்கு மிக நெருக்கமான நாளில்தான் தன் மாநாடை விஜய் நடத்த இருக்கிறார். இது பொது மக்களுக்கு நிச்சயம் சங்கடத்தை தான் ஏற்படுத்தும். ஏனென்றால் மாநாடு நடைபெறும் விக்ரவாண்டி சாலை சென்னையில் இருந்து பலரும் சொந்த ஊருக்கு செல்லும் முக்கிய வழிபாதையாகும்.
இதனால் தீபாவளி நேரத்தில் அது மிகவும் பரபரப்பாக இருக்கும். அந்த சமயத்தில் மாநாடு வைத்தால் தொண்டர்களின் கூட்ட நெரிசலும் அதிகமாக இருக்கும். இது பயணிகளுக்கும் இடையூறாக இருக்கும். இதையெல்லாம் யோசிக்காமல் விஜய் எப்படி இப்படி ஒரு முடிவு எடுத்தார் என தெரியவில்லை.
அதுதான் இப்போது சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே அவர் கட்சி பெயரில் ஆரம்பித்து கொடி அதில் இடம்பெற்றிருக்கும் யானை படம் வாகை மலர் என ஒவ்வொன்றும் சர்ச்சையாக தான் இருந்தது. இதில் அவருடைய முதல் மாநாடும் குளறுபடியாக இருப்பது சிறு விமர்சனத்தையும் ஏற்படுத்தி உள்ளது.