திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

விஜய் மறந்து போன 4 நடிகர்கள்.. லியோ சூட்டிங் ஸ்பாட்டில் தளபதி வாங்கிய மொக்கை

Actor Vijay: லோகேஷ் கனகராஜ், விஜய் கூட்டணியில் உருவாகி வரும் லியோ திரைப்படம் இப்போது வேகம் எடுத்துள்ளது. கடந்த சில வாரங்களாக தளபதியின் அரசியல் வரவு குறித்த செய்திகள் மீடியாவை ஆக்கிரமித்த நிலையில் மீண்டும் லியோ அனைவரையும் தன் கட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறது.

இந்நிலையில் இப்படத்தில் நடிப்பதற்காக ரொம்பவும் தீவிரம் காட்டியதாக நடிகர் வையாபுரி ஒரு பேட்டியில் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். அதாவது விஜய்க்கு நெருக்கமான நண்பர்களில் இவரும் ஒருவர். ஆரம்ப காலகட்டத்தில் இவருடன் நடித்த பல நடிகர்களை விஜய் பார்த்தே வருட கணக்காகிவிட்டது. இதை சில நடிகர்களும் வெளிப்படையாகவே கூறினார்கள்.

Also read: எனக்கும் விஜய்க்கும் எந்த பிரச்சனையும் இல்லைன்னு லியோ ரிலீஸ்ல தெரியும்.. மறைமுகமா மிரட்டி உருட்டி பார்க்கும் உதயநிதி

அப்படித்தான் வையாபுரியை லியோ செட்டுக்குள் பார்த்த விஜய்யும் இன்ப அதிர்ச்சியாகி இருக்கிறார். மேலும் என்னப்பா பார்த்து ரொம்ப வருஷம் ஆயிடுச்சு என்று வையாபுரியை பார்த்து கேட்டிருக்கிறார். ஆனால் அதற்கு அவர் கொடுத்த பதில் தான் தளபதியை மொக்கையாக்கி இருக்கிறது.

அதாவது உங்களுடன் நான் நடிக்கவில்லை என்றாலும் உங்கள் பட சூட்டிங் நடக்கும் போது வந்து கொண்டு தான் இருக்கிறேன். சில சமயங்களில் உங்களை மீட் செய்தும் இருக்கிறேன். நீங்கள் தான் மறந்து விட்டீர்கள் என்று கூறி ஷாக் கொடுத்தாராம். அதன் பிறகு விஜய் எப்படியோ இந்த படத்தில் இணைந்து விட்டீர்கள் நல்லது என்று கூறியிருக்கிறார்.

Also read: வாய்ப்பேச்சு மேடையோட போச்சு, சூர்யா இடத்தை பிடிக்க முடியாத விஜய்.. வெட்ட வெளிச்சமான நாடகம்

ஆனால் வையாபுரி இந்த படத்தில் இணைந்த கதையே ஒரு சுவாரஸ்யம் தான். கமலின் விக்ரம் படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசைப்பட்ட அவருக்கு சில காரணங்களால் நடிக்க முடியாமல் போய்விட்டது. அதை தொடர்ந்து எப்படியாவது லோகேஷின் படத்தில் நடித்துவிட வேண்டும் என்று அவரே வலிய சென்று இந்த வாய்ப்பை கேட்டாராம்.

அதன்படி மீண்டும் பல வருடங்கள் கழித்து விஜய்யுடன் இணைந்து இருக்கும் இவர் அந்த மகிழ்ச்சியை அனைவரிடமும் பகிர்ந்து கொண்டு வருகிறார். இப்படி வையாபுரி மட்டுமல்லாமல் தாமு, சார்லி, கொட்டாச்சி போன்ற நடிகர்களும் விஜய் படத்தில் பெரும்பாலும் நடித்திருக்கிறார்கள். அவர்களை எல்லாம் அவர் இப்போது ஞாபகம் வைத்திருப்பாரா என்று தெரியவில்லை. ஆனால் மீண்டும் இவர்கள் தளபதியுடன் இணைந்து நடித்தால் நன்றாக இருக்கும் என்பதே பலரின் கருத்தாக இருக்கிறது.

Also read: விஜய் பிறந்தநாளில் திரிஷா வெளியிட்ட புகைப்படம்.. 14 வருடங்கள் ஆகியும் மாறாத கெமிஸ்ட்ரி

Trending News