வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

கை கொடுத்து தூக்கி விட்டவருக்கு நீங்க காட்டுற நன்றி கடனா.? 5 வருஷமாக எட்டி கூட பார்க்காத விஜய்

Vijay Forgotten helping person: விஜய் என்னதான் இவருடைய அப்பா எஸ்ஏ சந்திரசேகர் மூலமாக சினிமாவிற்குள் நுழைந்து இருந்தாலும் ஆரம்பத்தில் பல தோல்விகளை சந்தித்து இருக்கிறார். அந்த நேரத்தில் இவருடைய கேரியரை தூக்கி நிறுத்த வேண்டும் என்பதற்காக எஸ்ஏ சந்திரசேகர் படாத பாடு பட்டிருக்கிறார். அப்பொழுது ரொம்பவே பீக்கிலிருந்த சத்யராஜிடம் உதவி கேட்டிருக்கிறார்.

அதாவது என் பையன் நடிக்கும் படங்களில் நீங்கள் கெஸ்ட் ரோல் பண்ணினால் எனக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும் என்று கேட்டிருக்கிறார். அதற்கு சத்யராஜ் கண்டிப்பாக பண்ணலாம் என்று கூறி பல மாதங்களாக இழுத்து அடித்திருக்கிறார். அதன் பின் சோர்ந்து போன விஜய்யின் அப்பா கடைசியாக விஜயகாந்திடம் ஒரு முறை கேட்டு பார்க்கலாம் என்று கேட்டிருக்கிறார். அதற்கு விஜயகாந்த் எத்தனை நாள் கால் சீட் வேண்டும், எப்பொழுது வேண்டுமென்று மட்டும் சொல்லுங்கள்.

நான் வருகிறேன் என்று கொஞ்சம் கூட யோசிக்காமல் உடனே சம்மதத்தை கொடுத்து இருக்கிறார். அப்படித்தான் செந்தூரப்பாண்டி படத்தில் விஜயகாந்த், விஜய்யின் அண்ணனாக நடித்துக் கொடுத்தார். இது விஜய்க்கு மிகப்பெரிய டர்னிங் பாயிண்டாக அமைந்தது. அத்துடன் வணிகரீதியாகவும் வெற்றி பெற்றது. இந்த படத்திற்கு பிறகு தான் ரசிகன், தேவா,விஷ்ணு, சந்திரலேகா, பூவே உனக்காக போன்ற தொடர் வெற்றி படங்களை கொடுத்து ரொமான்டிக் ஹீரோவாக முத்திரை பதிக்க ஆரம்பித்தார்.

Also read: விஜய் பட இயக்குனரா வேண்டவே வேண்டாம்.. அஜித் ரிஜெக்ட் செய்து, சூப்பர் ஹிட் அடித்த படம்

இதற்கு பிள்ளையார் சுழி போட்டு கொடுத்ததே விஜயகாந்த். இப்படி விஜய்யின் கேரியரை கை கொடுத்து தூக்கி விட்ட விஜயகாந்தை மறந்து, நன்றி கொஞ்சம் கூட இல்லாமல் தற்போது விஜய் இருக்கிறார். அதாவது விஜயகாந்த் கிட்டதட்ட ஐந்து வருடமாக உடல்நிலை சரியில்லாமல், ரொம்பவே அவஸ்தப்பட்டு இருக்கிறார். அதனால் இவருடைய ரசிகர்கள் எப்படியாவது மறுபடியும் பழைய மாதிரி கேப்டனை பார்க்க முடியாதா என்று ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

அது மட்டும் இல்லாமல் விஜயகாந்த் உடன் நடித்த சின்ன ஆர்டிஸ்ட்கள் முதல் பெரிய நடிகர்கள் வரை அவர் செய்த நன்றியை மறக்க முடியாமல் ஒவ்வொரு பேட்டிலும் விஜயகாந்தை பற்றி புகழாரம் சூடி வருகிறார்கள். ஆனால் விஜய்யோ, விஜயகாந்த் எப்படி இருக்கிறார் என்று கொஞ்சம் கூட நன்றியை இல்லாமல் அஞ்சு வருஷத்துல ஒரு முறை கூட பார்த்துட்டு வரவில்லை.

அதுவும் இப்பொழுது விஜயகாந்த் உடல்நிலையில் ஏதோ பிரச்சினை இருப்பதால் கிட்டத்தட்ட 14 நாட்கள் மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற வேண்டும் என்று செய்திகள் வெளி வந்திருக்கிறது. இந்த நிலையில் கூட விஜயகாந்தை பார்க்க முடியாத அளவிற்கு பிஸியாக இருக்கிறார் விஜய். ஆனால் சமீபத்தில் அறிமுகம் ஆன தயாரிப்பாளர் லலித் மகன் கல்யாணத்திற்கு போக நேரம் கிடைக்கிறது. இதுதான் விஜய்யின் உயர்ந்த குணமா என்று பலரும் இவரை பற்றி விமர்சித்து வருகிறார்கள்.

Also read: விஜய் அப்பா காதல் இளவரசனாக அசத்திய 5 படங்கள்.. ஆண்டனி தாசுக்கு இப்படி ஒரு பிளாஷ்பேக்கா

Trending News