திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

ஆசை தம்பிக்கு அல்வா கொடுத்த விஜய்.. அரசியலை விட நடிப்புதான் முக்கியம்னு தளபதி 69-க்கு கமிட்டான தளபதி

Vijay in Thalapathy 69:  நதிபோல நிற்காமல் ஓடிக்கொண்டே இருக்கணும் என்ற பார்முலா எந்த நடிகருக்கு பொருந்துதோ இல்லையோ தளபதி விஜய்க்கு கச்சிதமாக பொருந்துகிறது. ஒரு படத்தில் கமிட் ஆகி நடித்துக் கொண்டிருக்கும் பொழுதே அடுத்த படத்திற்கான வேலைகளிலும் களமிறங்கி கமிட்டாவது விஜய்க்கு கைவந்த கலை. அந்த வகையில் தற்போது விஜய், தளபதி68 படத்தை வெங்கட் பிரபு கூட்டணியில் நடித்துக் கொண்டு வருகிறார்.

முதல்முறையாக வெங்கட் பிரபுவுடன் கூட்டணி வைத்திருக்கும் விஜய் காம்போ எந்த அளவிற்கு இருக்கப் போகிறது என்று பார்ப்பதற்கு மக்கள் ரொம்பவே ஆவலாக காத்துக் கொண்டிருக்கிறார்கள். காரணம் இரண்டு முன்னணி நடிகர்களான அஜித் மற்றும் சிம்புவுக்கு மிகப்பெரிய ஹிட் கொடுத்த இயக்குனர்களில் வெங்கட் பிரபு தனி இடத்தை பிடித்திருக்கிறார்.

அந்த வகையில் விஜய்க்கும் மாஸ் படத்தை கொடுத்து ரசிகர்களை குஷிப்படுத்துவார் என்ற நம்பிக்கை வெங்கட் பிரபு மீது அதிகமாக இருக்கிறது. மேலும் இப்படத்தில் மீனாட்சி சவுத்ரி, லைலா, சிநேகா, பிரசாந்த் மற்றும் மைக் மோகன் என நட்சத்திர பட்டாளங்கள் இணைந்திருக்கிறார்கள். அந்த வகையில் ஒவ்வொரு பிரபலங்களின் ரசிகர்கள் இந்த படத்தை விழி மீது வழி வைத்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Also read: தளபதி ஃபிட்னஸிற்கு இதுதான் காரணம்.. விஜய் என்றும் இளமையாக இருக்க கடைப்பிடிக்கும் 5 விஷயங்கள்

இதனை தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் மிக மும்மரமாக படப்பிடிப்பு போய்க்கொண்டிருக்கிறது. இதற்கு இடையில் விஜய் அவருடைய 69 ஆவது படத்திற்கும் பிள்ளையார் சுழி போடப் போகிறார். அதாவது 68 வது படத்தை முடித்துவிட்டு ஒரு மாதம் ரெஸ்ட் எடுக்க போகிறார்.

அதன் பிறகு விஜய் அவருடைய 69 ஆவது படத்தை ஆசைத்தம்பி ஆன அட்லியுடன் இணைவார் என்று எதிர்பார்ப்பு வைக்கப்பட்டது. ஆனால் தம்பிக்கு அல்வா கொடுத்துவிட்டு இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கமிட்டாக போகிறார். ஏற்கனவே கார்த்திக் சுப்புராஜ், விஜய்யிடம் கேட்டிருக்கிறார். அதற்கு கிரீன் சிக்னல் கொடுத்திருக்கிறார்.அத்துடன் இதை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கப் போகிறது என்ற தகவலும் வெளிவந்திருக்கிறது.

இதற்கிடையில் விஜய் வெங்கட் பிரபுவுடன் கூட்டணி வைத்திருக்கும் 68வது படத்தை முடித்துவிட்டு கொஞ்சம் சினிமாவில் இருந்து பிரேக் எடுக்கப் போகிறார். அடுத்து அரசியலில் களமிறங்கி அதிலில் ஜெயிப்பதற்கு வேலைகளை பார்ப்பார் என்று கோலிவுட் வட்டாரத்தில் பல பேச்சுக்கள் அடிபட்டது. ஆனால் விஜய்யோ அரசியல் ஒரு பக்கம் இருந்தாலும் எனக்கு நடிப்புதான் முக்கியம் என்று நிரூபித்துக் காட்டும் வகையில் அவருடைய 69 ஆவது படத்திற்கும் கிரீன் சிக்னல் கொடுத்திருக்கிறார்.

Also read: பிரபுதேவாவுக்கு ஜோடியாகும் விஜய்யின் உடன்பிறப்பு.. 4 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தோல்வி இயக்குனருடன் கூட்டணியா.?

Trending News