திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

மொத்தத்தில் ரூட்டை போட்டுக் கொடுத்த விஜய்.. ஜிவி பிரகாஷ், ப்ரியா பவானி சங்கர் போடும் ஆட்டம்

 Leo Vijay: விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். லியோ படத்தில் விஜய் ஒரு புது விதமான வேலையை செய்துள்ளார். இதையே எல்லோரும் பின்பற்றி வருகின்றனர். அதிலும் இதை அப்படியே ஜிவி பிரகாசும், பிரியா பவானி சங்கரும் பின்பற்றி ஓவர் அழிச்சாட்டியம் செய்கின்றனர்.

அதாவது விஜய் நடிக்கும் எல்லா படத்திலும் ஒரு பாடலை பாடி விடுவார். விஜய் சினிமாவில் நடிக்க துவங்கும் போது, ‘இதெல்லாம் மூஞ்சியா!’ என ஏகப்பட்ட உருவ கேலிகளை சந்தித்தார். அப்படியும் அவருடைய தந்தை எஸ்ஏ சந்திரசேகர் இயக்கிய படங்களில் தொடர்ந்து தனது திறமையை காட்டி தற்போது பாக்ஸ் ஆபீஸ் நாயகனாக தமிழ் சினிமாவில் கலக்கி கொண்டிருக்கிறார்.

Also Read: தளபதியை பற்றி யாருக்கும் தெரியாத 6 விஷயம்.. அஜித், விஜய்க்கும் இப்படி ஒரு தொடர்பு இருக்கா.?

அது மட்டுமல்ல அவர் அப்பா சந்திரசேகர் படத்தில் இருந்து பாடும் பழக்கத்தை விஜய் வைத்துள்ளார். அவர் பாடிய படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட் ஆனது. இதனால் இந்த பழக்கத்தை தொடர்ந்து தன்னுடைய படங்களில் செய்து கொண்டிருக்கிறார். இப்பொழுது லியோ படத்தில் ஒரு பாடல் பாடியுள்ளார்.

அதற்காக தனியா ரெக்கார்டிங் சென்டர் போகாமல் மொபைல் ரெக்கார்டிங்கில் ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே பாடியுள்ளார். இப்பொழுது இந்த மொபைல் ரெக்கார்டிங் பெரிதும் பேமஸ் ஆகி உள்ளது. எல்லா ஹீரோக்களும் குறிப்பாக ஜிவி பிரகாஷ், பிரியா பவானி சங்கர் போன்றவர்கள் இந்த மொபைல் ரெக்கார்டிங்கிலேயே அவர்கள் டப்பிங்கை முடித்துவிட்டு தங்கள் வேலைப்பளுவை குறைத்து விடுகிறார்கள்.

Also Read: விஜய்யால் குடியை மறந்த வெங்கட் பிரபு.. விக்னேஷ் சிவன் போல் தூக்கி எறிந்து விடுவார் என்ற பயம்.!

இவர்கள் டப்பிங்-கிற்காக தனி நேரம் ஒதுக்காமல் தங்கள் மொபைல் போனிலேயே மொத்த வேலையும் முடித்து விடுகின்றனர். இதனால் இவர்கள் மட்டுமல்ல இதை அப்படியே தற்போது டாப் நடிகர்களாக இருக்கும் சூர்யா, விஜய் சேதுபதி முதல் அனைவரும் மொபைல் ரெக்கார்டிங்கை யூஸ் பண்ணி கொள்கிறார்கள்.

இவர்களுக்கெல்லாம் நிறைய பட வாய்ப்புகள் இருப்பதால், டப்பிங்-கிற்காகவே தனி நேரம் ஒதுக்க முடியாமல் நிறைய பட வாய்ப்புகளை கை நழுவ விடுகின்றனர். இதனால் விஜய்யின் ரூட்டை தற்போது முன்னணி நடிகர்களும் பின்பற்றுகின்றனர். நிறைய பிரபலங்கள் தங்கள் படங்களில் பாடவும் ஆரம்பித்து விட்டனர். இதற்கெல்லாம் பிள்ளையார் சுழி போட்டது விஜய் தான் என்பது நிதர்சனமான உண்மை.

Also Read: ஒன்லைன் ஸ்டோரிக்கு ஓகே சொன்னது தப்பா போச்சு.. சரக்கு இல்லாமல் கால்ஷீட் வாங்கி விஜய்யை ஏமாற்றும் இயக்குனர்

Trending News