வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

திருந்தாத விஜய், திருந்தாத அரசியல்வாதிகள்.. தெரிந்தும் மீண்டும் மீண்டும் பிரச்சினையில் மாட்டிக்கொள்ளும் தளபதி.!

Actor Vijay: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ படத்தில் விஜய் நடித்திருக்கிறார். இந்த சூழலில் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு கூடுதலாக இருந்து வருகிறது. நேற்று லியோ படத்தின் முதல் சிங்கிள் வெளியிடுவதற்கான போஸ்டரை படக்குழு அறிவித்தனர்.

இதில் சிகரெட் உடன் விஜய் தோன்றினார். இதற்கு முன்னதாகவே விஜய் துப்பாக்கி மற்றும் சர்கார் படங்களில் சிகரெட் பிடிப்பது போல் நடித்ததால் பிரச்சனை ஏற்பட்டது. அப்போது அன்புமணி ராமதாஸ் இனி படங்களில் சிகரெட் பிடிக்காமல் விஜய் நடிக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.

Also Read : பூஜையே போடல அதுக்குள்ள ஆரம்பித்த பஞ்சாயத்து.. 200 கோடியால் விஜய்க்கு கிளம்பிய சிக்கல்

இதனால் விஜய் இனி சிகரெட் பிடிக்கும் காட்சியில் நடிக்க மாட்டேன் என உறுதி அளித்து இருந்தார். ஆனால் இப்போது எல்லாம் தெரிந்தும் லியோ படத்தில் இந்த காட்சியை வைக்க காரணம் என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை விஜய் இதை யோசிக்கவில்லையா அல்லது தெரிந்தும் பயம் இல்லையா என பலரும் கேட்டு வருகின்றனர்.

விஜய் அரசியலுக்கு வரும் நேரத்தில் இதுபோன்று நடித்தால் கண்டிப்பாக அரசியல்வாதிகள் இந்த விஷயத்தை விட மாட்டார்கள் என்பது நன்றாகவே தெரியும். அதையும் மீறி விஜய் இவ்வாறு செய்ததற்கு காரணம் என்ன என்பது தற்போது வரை தெரியவில்லை. இவ்வாறு விஜய் திருந்தாமல் ஒவ்வொரு விஷயத்தையும் செய்து வருகிறார்.

Also Read : அசுரன் பட சிவசாமியாக மாறிய தளபதி விஜய்.. மேடையில் அசர வைத்த வசனம்

இவ்வாறு செய்வதால் இது அரசியல் செய்பவர்களுக்கு வழி வகுக்கும். வரும் காலத்தில் இதை குறைத்துக் கொள்ளவில்லை என்றால் கேலி, கிண்டலுக்கு ஆளாக நேரிடும். அரசியலுக்கு வருவதற்கு முன்பே ஒரு நல்ல காரணத்தை கொடுக்க வேண்டும். அவ்வாறு இன்று கல்விக்காக அவர் நடத்திய நிகழ்ச்சி பாராட்டுக்கு உரியது.

ஆகையால் சமூக அக்கறை கொண்ட படங்களை இனி விஜய் தேர்ந்தெடுத்து நடிக்கலாம் என ரசிகர்கள் கூறுகிறார்கள். அதுவும் இல்லை என்றால் குறைந்தபட்சம் மது, புகை பிடித்தல் போன்ற காட்சிகளை தனது படங்களில் தவிர்க்கலாம். விஜய்யின் சினிமா மற்றும் அரசியல் இரண்டுக்குமே நல்லது என கூறி உள்ளனர்.

Also Read : மாஸ் என்ட்ரியால் கதி கலங்கும் பெரும்புள்ளிகள்.. நியூ லுக்கில் நீலாங்கரையை வட்டமிட்ட தளபதி விஜய்

Trending News