திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

தப்பான ரூட்டை போட்டுக் கொடுக்கும் விஜய்.. நல்ல தளபதியும் இல்ல, சரியான அரசியல்வாதியும் இல்ல

vijay strategy in politics: விஜய் தற்போது ஆட்ட நாயகனாகவும், வசூல் மன்னனாகவும் பல படங்களில் ஜொலித்துக் கொண்டு வருகிறார். எத்தனையோ நடிகர்கள் போட்டி போட்டு வந்தாலும் அவர்களை விட ஒரு படி மேலே இவர்தான் என்று சொல்லும் அளவிற்கு வளர்ந்து வருகிறார். அப்படிப்பட்ட இவர் அரசியலிலும் ஜெயித்து விட வேண்டும் என்று முழு முயற்சியுடன் களத்தில் இறங்கி இருக்கிறார்.

அதனால் விஜய் இப்போதைக்கு முழுக்க முழுக்க அரசியல் சம்பந்தப்பட்டமான வேலைகளில் காய் நகர்த்தி வருகிறார். அதற்காக லியோ வெற்றி விழா நிகழ்ச்சியில் ரசிகர்களை ஊக்குவிக்கிறேன் என்ற பெயரில் அவர்களை மேலும் தப்பு செய்வதற்கு தப்பான ரூட்டை போட்டு கொடுத்திருக்கிறார்.

இன்னும் சொல்லப்போனால் ரோகிணி தியேட்டரில் நடந்த பிரச்சனை மற்றும் சூப்பர் ஸ்டார் விவகாரம் பற்றி எதற்குமே வாய திறக்கவில்லை. சும்மா பெயருக்கு சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு நான் ஆசைப்படவில்லை என்பதை மனதார சொல்லாமல் ஏதோ சப்பக்கட்டாக முற்றுப்புள்ளி வைத்தது போல் தெரிகிறது.

Also read: சூர்யா, கார்த்தியின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.? ரஜினி, விஜய் எல்லாம் பின்னாடி தான்

அதற்கு காரணம் இந்த ஒரு விஷயத்தால் இவருடைய அரசியலுக்கு எந்தவித களங்கமும் வந்து விடக்கூடாது. அத்துடன் ரஜினி ரசிகர்களால் ஓட்டு பிரச்சனையும் வந்து விடக்கூடாது என்பதற்காக சும்மா பெயருக்கு பேசியிருக்கிறார். அடுத்தபடியாக ரசிகர்களுக்கு அட்வைஸ் எதுவும் கொடுக்காமல் ஏன் இவ்வளவு கோபம் உங்களுக்கு என்று பட்டும் படாத மாதிரி கேட்டு இருக்கிறார்.

இன்னும் சொல்லப்போனால் ரசிகர்களை பார்த்து நீங்கள் செய்தது தவறு என்று சொல்லவில்லை. எந்த காரணத்திற்கும் இனி கோபப்படக்கூடாது என்றும் சொல்லாமல், அதற்கு பதிலாக ஏன் இவ்வளவு கோபம் என்று சாதாரணமாக கேட்டிருக்கிறார். ஆக மொத்தத்தில் ரசிகர்களிடமும் வெறுப்பை சம்பாதித்து விடக்கூடாது, அதே நேரத்தில் அவர்களால் காரியத்தையும் சாதிக்க வேண்டும் என்பதுதான் இவருடைய நோக்கம்.

அத்துடன் இவர்களை வைத்துதான் அரசியலில் ஜெயிக்க வேண்டும். அதனால் ரசிகர்கள் செய்யும் தவறை சுட்டி காட்டாமல் இருக்கிறார். அப்படிப்பட்ட இவர் ரசிகர்களுக்கு நல்ல தளபதியும் இல்லை, அரசியலுக்கு சரியான ஆளும் இல்லை என்று மூத்த பத்திரிக்கையாளர் பிஸ்மி கூறியிருக்கிறார்.

Also read: விஜய்க்கு கை கொடுக்க வரும் ரஜினி, அஜித்.. இந்தியளவில் பரபரப்பாகும் முக்கிய புள்ளிகள்

Trending News