திங்கட்கிழமை, நவம்பர் 18, 2024

டிஜிட்டல் சம்பவம் வேற மாதிரி ட்விஸ்ட்.. ஓடிடி ரிலீசுக்கு தயாராகும் கோட், எப்ப தெரியுமா.?

GOAT-OTT: விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கியிருந்த கோட் கடந்த ஐந்தாம் தேதி பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது. ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்தது மட்டுமல்லாமல் சிவகார்த்திகேயன், திரிஷா என பல விஷயங்கள் படத்தில் இருந்தது.

அதேபோல் தயாரிப்பு தரப்பும் படத்தை தடபுடலாக ப்ரமோஷன் செய்தது. ஆனால் அதுவே அவர்களுக்கு பின் விளைவாக மாறியது. படம் கொடுத்த அலப்பறைக்கு ஏற்ற மாதிரி இல்லை என்ற விமர்சனங்கள் பரவலாக கிளம்ப தொடங்கியது.

அதேபோல் விஜய் எதிர்ப்பாளர்களும் நெகட்டிவ் விஷயங்களை பரப்பினார்கள். இருந்தாலும் படம் அடுத்தடுத்த நாட்களில் வசூல் வேட்டையாடியது. அதன்படி இப்படம் தற்போது வரை 450 கோடி வசூலை நெருங்கி உள்ளது.

மேலும் கடந்த வாரம் தமிழில் ஏழு படங்கள் வெளியானது. ஆனால் அது எதுவும் கோட் படத்தை பாதிக்கவில்லை. இப்போதும் கூட படம் சில திரையரங்குகளில் ஓடிக்கொண்டு தான் இருக்கிறது. இந்த சூழலில் ஓடிடி ரிலீஸ் பற்றிய முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.

டிஜிட்டலுக்கு வரும் டைரக்டர்ஸ் கட் காட்சிகள்

அந்த வகையில் கோட் படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்ஃப்லிக்ஸ் தளம் 125 கோடிகளை கொடுத்து வாங்கி இருக்கிறது. பொதுவாக ஒரு படம் வெளியான 28 நாட்கள் கழித்து ஓடிடி தளங்களில் வெளியாகும்.

அப்படி பார்த்தால் கோட் அக்டோபர் முதல் வாரத்தில் அதாவது 4ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அங்கு தான் ஒரு பெரும் ட்விஸ்ட் ரசிகர்களுக்கு காத்திருக்கிறது. அதாவது தியேட்டரில் பார்த்தது போல் இல்லாமல் டிஜிட்டலில் புதுப்பொலிவுடன் கோட் ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளது.

என்னவென்றால் தற்போது வெளியான படமே மூன்று மணி நேரம் இருந்தது. இதுவே சில காட்சிகளை வெட்டி தான் ரிலீசுக்கு கொண்டு வந்தார்கள். அப்படி பார்த்தால் ரசிகர்கள் ரசித்து பார்க்கக்கூடிய பல காட்சிகள் கைவசம் இருக்கிறது என வெங்கட் பிரபு தெரிவித்து இருந்தார்.

அதிலும் சிவகார்த்திகேயன் மைக் மோகன் இடையேயான காட்சிகள் வேற லெவலில் இருக்கும் என கூறியிருந்தார். அந்த காட்சிகள் அனைத்தும் தற்போது சேர்க்கப்பட்டு படம் ரிலீசாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதைத்தான் ரசிகர்களும் தற்போது ஆர்வத்துடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

புதுப்பொலிவுடன் ரிலீசுக்கு தயாராகும் கோட்

- Advertisement -spot_img

Trending News