புதன்கிழமை, ஜனவரி 8, 2025

பாக்ஸ் ஆபிஸ் கணிப்பை உடைக்க வரும் கோட்.. சர்வதேச அளவில் விஜய் செய்யப் போகும் முதல் நாள் சாதனை

GOAT-Vijay: எங்கு திரும்பினாலும் கோட் படம் பற்றிய ஆரவாரமும் கொண்டாட்டமும் தான் அதிகமாக இருக்கிறது. சோசியல் மீடியாவில் கடந்த சில நாட்களாகவே கலைகட்டி வந்த கோட் திருவிழா இன்று உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது.

நாளை படம் வெளிவர இருக்கும் நிலையில் தயாரிப்பு தரப்பு டிஜிட்டல் ப்ரோமோஷனில் வேகப்படுத்தி இருக்கிறது. அடுத்தடுத்த அப்டேட், பேட்டிகள், சுவாரஸ்யமான விஷயங்கள் என ஒவ்வொன்றும் ரசிகர்களை ஆர்வப்படுத்தி வருகிறது.

அதேபோல் இதுதான் கடைசி அப்டேட் என ரிலீஸ் ப்ரோமோ ஒன்றை தயாரிப்பாளர் வெளியிட்டுள்ளார். முழுக்க முழுக்க விஜயின் ஆக்சன் அவதாரமாக இருக்கும் அந்த வீடியோ இப்போது சோஷியல் மீடியாவை ஆக்கிரமித்துள்ளது.

அதேபோல் டிக்கெட் புக்கிங், சிறப்பு காட்சிக்கான ஏற்பாடு என கோட் பீவர் அதிகரித்துள்ளது. இந்நிலையில் கோட் முதல் நாளிலேயே 50 கோடியை தாண்டி வசூலிக்கும் என பாக்ஸ் ஆபிஸ் கருத்து கணிப்புகள் சொல்கின்றன.

பாக்ஸ் ஆபிஸ் கணிப்பு

ஆனால் தயாரிப்பாளர் அர்ச்சனா உங்களுடைய கணிப்பு எல்லாம் உடைபடும் அளவுக்கு முதல் நாள் வசூல் இருக்கும். வெகு சுலபமாக 100 கோடியை இப்படம் தாண்டி விடும் என கூறியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆனாலும் உலகம் முழுவதும் 5000 திரையரங்குகளில் வெளியாக இருக்கும் இப்படம் நிச்சயம் இந்த வசூலை அடைந்து விடும் என தெரிகிறது. அது மட்டும் இன்றி இது சர்வதேச அளவில் விஜய் செய்யப் போகும் சாதனை என அர்ச்சனா குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஆரம்பத்தில் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் கூட்டணியை வைத்து தான் படம் எடுக்க இருந்தோம். ஆனால் அதன் பிறகு வெங்கட் பிரபு சொன்ன கதையில் விஜய் நடித்தால் நன்றாக இருக்கும் என முடிவு செய்து கூட்டணியை தொடங்கினோம்.

பொதுவாக இன்டர்நேஷனல் லெவலில் எடுக்கப்படும் படத்திற்கு இந்தியாவிலேயே சில இடங்களை காட்டுவார்கள். ஆனால் நாங்கள் சிறு காட்சியாக இருந்தாலும் சம்பந்தப்பட்ட அந்த நாட்டிற்கே சென்று படமாக்கினோம் என தெரிவித்துள்ளார். ஆக மொத்தம் இறுதி கட்டத்தை எட்டி இருக்கும் கோட் நாளை பெரும் சம்பவத்திற்கு தயாராகிவிட்டது.

சர்வதேச அளவில் எதிர்பார்க்கப்படும் கோட்

Trending News