வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

லண்டன்னு சொல்லிட்டு நார்வே போன விஜய்.. மொத்த நெருப்பையும் கொளுத்தி போட்டு குளிர் காயும் நம்பர் நடிகை

Actor Vijay Controversy: மாஸ்டர் படத்திற்கு பிறகு விஜய் மறுபடியும் லோகேஷ் கனகராஜ் உடன் லியோ படத்தில் இணைந்து நடித்து முடித்து இருக்கிறார். வரும் ஆயுத பூஜைக்கு ரிலீஸ் ஆக இருக்கும். இதனால் இந்த படத்திற்கான ப்ரமோஷன் பணிகள் தற்போது சூடு பிடிக்க ஆரம்பித்து இருக்கிறது. இந்நிலையில் விஜய் லியோ முடிந்தவுடன் லண்டன் சென்று விட்டார். விஜய்யின் மனைவி சங்கீதா வீடு அங்கு இருப்பதால், தளபதி மாமியார் வீட்டிற்கு தான் சென்றிருக்கிறார்.

அங்கே ஓய்வுக்கு பின் அடுத்து வெங்கட் பிரபு இயக்கப் போகும் தளபதி 68க்கு ரெடி ஆகி வருவார். ஆனால் விசாரித்துப் பார்த்தால் தளபதி விஜய் லண்டனே போகவில்லையாம், அவர் நார்வே சென்று இருக்கிறார். ஏற்கனவே திரிஷா நார்வே-வில் இருந்து எடுத்த போட்டோக்களை எல்லாம் இன்ஸ்டாகிராமில் போட்டு வருகிறார்.

Also Read: ஜெயிலரை பார்த்தபின் நெல்சனுக்கு போன் போட்ட விஜய்.. என்ன சொன்னார் தெரியுமா.?

இப்பொழுது விஜய்யும் திரிஷா இருக்கும் நார்வே போயிருக்கிறார் என்றால் எங்கேயோ இருக்கிறது. விஜய், திரிஷா அப்போது நார்வேயில் தான் இருக்கிறார்களா என்று எல்லோரும் ஆதாரத்தை தேடி வருகின்றனர். ஏற்கனவே ரெண்டு பேரையும் வைத்து பல கிசு கிசுகள் வந்த வண்ணம் இருக்கிறது. இப்பொழுது இது அவர்களுக்கு மேலும் தீனி போடும் விதமாக அமைந்துள்ளது.

ஏற்கனவே கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி போன்ற படங்களில் விஜய்க்கு ஜோடியாக நடித்த திரிஷா 14 வருடங்களுக்கு பிறகு தான் லியோ படத்தில் இப்போது ஜோடி போட்டு இருக்கிறார். இவர்கள் இருவருக்கும் திரையில் கெமிஸ்ட்ரி பக்காவாக ஒர்க் அவுட் ஆனதால், இவர்களது காம்போவில் வெளியான படங்கள் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இது ஒரு கட்டத்தில் காதல் கிசுகிசுவாகவும் மாறியது.

Also Read: திரும்பத் திரும்ப விஜய்யை வெறுப்பேத்த அனிருத் செய்த மட்டமான காரியம்.. காசு கொடுக்கிற முதலாளிக்கே ஆப்பா!

இதை கேள்விப்பட்ட விஜய் மனைவி சங்கீதா விஜய்க்கு ஒரு கண்டிஷன் போட்டுள்ளார். இனிமேல் திரிஷாவுடன் மட்டும் சேர்ந்து நடிக்க கூடாது என்று கூறி இருக்கிறார். அதனால் தான் இந்த ஜோடி 14 வருடங்களாக திரையில் சேரவில்லை, இப்போது லியோ படத்தில்ஜோடி போட்டதால், இனிமேல் யாராலும் பிரிக்க முடியாது போல் தெரிகிறது. அந்த அளவிற்கு இவர்களைக் குறித்த கிசு கிசு நாலா பக்கமும் கேட்கிறது.

அதற்கெல்லாம் ஆதாரமாக திரிஷாவும் இப்போது நார்வேவில் இருப்பதாக புகைப்படத்தை வெளியிட்டு, மொத்த நெருப்பையும் கொளுத்தி போட்டு குளிர் காய்ந்து கொண்டிருக்கிறார். இதெல்லாம் கேள்விப்பட்டால் சங்கீதா இனி என்ன ரியாக்ஷன் கொடுக்கப் போகிறாரோ என விஜய்யை நினைத்து தளபதி ரசிகர்கள் கலக்கத்தில் உள்ளனர். ஒரே ஒரு போட்டோ மட்டும் திரிஷா, விஜய் இருவரும் நார்வேவில் இருப்பது போல் வந்து விட்டால் கிசுகிசுவெல்லம் உண்மையாகிவிடும்.

Also Read: பீஸ்ட் படத்தில் செஞ்ச தவறை திருத்திய நெல்சன்.. விஜய் தடுத்ததை ரஜினி செய்யலை

Trending News