திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

மன்சூர் அலிகானை விட கம்மியான சம்பளம் வாங்கிய விஜய்.. ரகசியத்தை போட்டு உடைத்த வீரபத்திரன்

Actor Vijay: விஜய், மன்சூர் அலிகான் இருவரும் ஏராளமான படங்களில் இணைந்து நடித்திருக்கின்றனர். அதில் பல வருடங்களுக்கு பிறகு தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவர்கள் இணைந்து நடித்திருக்கும் லியோ மிகப் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்நிலையில் மன்சூர் அலிகானை விட விஜய் குறைவான சம்பளம் வாங்கிய விஷயம் தற்போது வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விஷயத்தை வெளிப்படையாக போட்டு உடைத்திருக்கும் மன்சூர் அலிகான் லியோ குறித்த சில விஷயங்களையும் பகிர்ந்துள்ளார்.

Also read: ஜெயிலரின் வெற்றியை மறக்கடிக்க களமிறங்கும் லியோ.. லோகேஷ்-க்கு தளபதி போட்டோ ஆர்டர்

அந்த வகையில் நாளைய தீர்ப்பு படத்தில் ஆரம்பித்து தேவா, செந்தூரப்பாண்டி, மின்சார கண்ணா உள்ளிட்ட பல படங்களில் விஜய்யுடன் இவர் இணைந்து நடித்திருக்கிறார். அதனாலேயே எஸ் ஏ சந்திரசேகர் குடும்பத்துடன் இவருக்கு நெருங்கிய நட்பும் இருக்கிறது.

இந்த சூழலில் சினிமா ஒருவரை எந்த அளவுக்கு வளர்ச்சி அடைய வைக்கும் என்பதற்கு உதாரணமாக இவர் ஒரு சம்பவத்தை கூறியுள்ளார். அதாவது விஜய்யின் வசந்தவாசல் படத்தில் மன்சூர் அலிகான் வில்லனாக நடித்திருந்தார். அதற்காக அவருக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் 4 லட்சம்.

Also read: லியோ போட்ட விதை, செகண்ட் இன்னிங்ஸில் பட்டைய கிளப்பும் ஆக்சன் கிங்.. என்ன கைவசம் இத்தனை படங்களா!

ஆனால் அப்படத்தில் ஹீரோவாக நடித்திருந்த விஜய்க்கு வெறும் இரண்டு லட்சம் தான் சம்பளமாக கொடுக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறாக வில்லனை விட கம்மியான சம்பளம் வாங்கிய தளபதி இப்போது லியோவில் பல நூறு கோடி சம்பளம் வாங்கும் அளவுக்கு உயர்ந்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் அடுத்த படத்தில் அவருக்கு 200 கோடி சம்பளம் கொடுக்கப்பட இருக்கிறது.

இதைப்பற்றி கூறியிருக்கும் மன்சூர் அலிகான் விஜய்யின் இந்த வளர்ச்சி பெருமையாக இருக்கிறது. ஆனால் நான் இன்னும் அதே லெவலில் தான் இருக்கிறேன் என்று மனம் திறந்து பேசியுள்ளார். அந்த வகையில் மன்சூர் அலிகானை விட விஜய் மிக குறைவான சம்பளம் வாங்கி இருக்கும் இந்த விஷயம் பலருக்கும் ஆச்சரியம் கலந்த தகவலாக இருக்கிறது.

Also read: லியோவுக்கு கலாநிதி கொடுத்த கெடு.. அனிருத் ஐடியாவால் முழிக்கும் விஜய்

Trending News