வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

அப்பா கிட்ட பெல்ட் அடி.. விஜய், அஜித் போட்டி எங்கே ஆரம்பித்தது?

விஜய் அஜித் இருவரும் இன்று முன்னணி நடிகர்களாக உள்ளனர். இருவர் போட்டி போடுகிறார்களா இல்லையோ, ஆனால் ரசிகர்கள் போட்டி போட்டு கொண்டு தான் இருக்கிறார்கள். இந்த நிலையில், இவர்கள் போட்டி க்கு சினிமா காரணமா அல்லது நடிகை காரணமா என்று ஒரு கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக சில தகவல்களும் வெளியாகியுள்ளது.

ஆரம்ப கட்டத்தில் விஜய் நடிக்க முயற்சிக்கையில் அவர் அப்பாவிடம் ரஜினி பட வசனங்களைப் பேசிக்காட்டி நடித்திருக்கிறார். பின் நாளைய தீர்ப்புன்னு ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். முதல் படம் பெரும் பிளாப். பத்திரிக்கையாளர்கள் பயங்கரமாக விமர்சிக்கின்றனர். டைரக்டர் மகன் என்றால் ஹீரோவாகிடணுமா, இவன் மூஞ்சியை எல்லாம் காசுகொடுத்து பார்க்கணுமா என்று எழுதியிருக்காங்க. இதைப் படிச்ச எஸ்.ஏ.சந்திரசேகர், பயங்கரமா எமோஷனல் ஆகிறார்.

பெல்ட்டால் அடி வாங்கிய விஜய்

இந்த கடுப்பில், விஜயை பயங்கரமாக திட்டுகிறார் எஸ்.ஏ.சந்திரசேகர். மேலும், அப்போது அவர் அப்பாவிடம் பெல்ட்டில் அடிவாங்குகிறார், நடிகர் விஜய். இந்த நிலையில், ஒரு பெரிய நடிகரின் படத்தில் விஜய் நடித்தால் தேறிடுவார் என்று சத்யராஜை அப்ரோச் பண்றாங்க. ஆனால், அவர் செம்ம பிசி.

அந்த தருணத்தில் விஜயகாந்த் மனசுக்கு வந்து, ஷோபா விஜயகாந்துக்கு போன் அடிச்சு பேசுறாங்க. அப்போது சாரை பேசச் சொல்லுங்கன்னு விஜயகாந்த் சொல்றார். எஸ்.ஏ.சி தன் குடும்பச் சூழ்நிலையை விஜயகாந்திடம் சொல்கிறார். அரைமணிநேரத்தில் விஜயகாந்த் அவர் வீட்டுக்கு வந்து, நடிக்க சம்மதம் சொல்லி நடிச்ச படம் தான், செந்தூரப் பாண்டி. படம் வேற லெவல் ஹிட் ஆனது.

அடுத்து சங்கவி – விஜய் காம்பினேஷனில் நிறையப் படங்கள் வருது. ரசிகன், விஷ்ணு, கோயம்புத்தூர் மாப்பிள்ளை ஆகியப் படங்களில் இரண்டு பேரும் சேர்ந்து நடிக்குறாங்க. ஆவரேஜாகப் படம் ஓடுது. அப்போது சங்கவி கூட விஜய் நெருக்கமாகுறாங்க. இரண்டு பேரும் லவ் பண்றாங்க. அப்போது நிறைய நாட்கள் சங்கவி வீட்டிலேயே விஜய் தங்கிவிடுகிறார்.

ஒருநாள் இது எஸ்.ஏ.சி க்கு தெரியவர இரண்டு போரையும் கூப்பிட்டு எச்சரிக்கிறார். மேலும் இப்படி இருந்தால், சினிமாவில் வளரமுடியாது என்றும் கூறுகிறார். இருப்பினும், இருவரும் இவருக்கு தெரியாமல் லவ் பண்ணிட்டு தான் வந்திருக்கிறார்கள். இதும் ஒருநாள் தெரியவர, சங்கவியை கூப்பிட்டு அறிவுரை கூறுகிறார்.

அப்போது தான், சங்கவியின் டிராக் மாறுது. அடுத்து அவங்க அஜித் பக்கம் போறாங்க. அஜித்தின் முதல் பட ஹீரோயின் ஆக சங்கவி நடிக்கிறார். இதில் விஜய்க்கும் அஜித்துக்கும் பிரச்னைகள் ஆரம்பித்ததாக கூறப்படுகிறது.

இதுவே அவர்கள் போட்டிக்கு முழு காரணம் இல்லையென்றாலும், இதுவும் ஒரு காரணம் என்று கூட சொல்லலாம்.

Trending News