புதன்கிழமை, ஜனவரி 22, 2025

பிரியா அட்லீயை நேரில் வாழ்த்திய விஜய்.. இணையத்தில் ட்ரெண்டாகும் புகைப்படம்

பிரபல இயக்குனரான அட்லீ மிகக் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கும் வாய்ப்பை பெற்றார். இப்போது பாலிவுட்டில் முதல்முறையாக கால் பதித்திருக்கும் அட்லீ ஜவான் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி ஆகியோர் நடித்த வருகின்றனர்.

இந்நிலையில் அட்லீ தன்னுடைய நீண்ட கால காதலியான பிரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். நடிகை பிரியா பல படங்களில் நடிகைகளின் தோழியாக நடித்துள்ளார். இந்நிலையில் இவர்களுக்கு கடந்த 2014 ஆண்டு திருமணம் நடந்த நிலையில் கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் பிறகு பிரியா கருவுற்றுள்ளார்.

Also Read : இந்த வருடம் ஏமாற்றத்தை தந்த 6 இயக்குனர்கள்.. ஒரே படத்தை பல வருடமாக உருட்டும் அட்லீ

சமீபத்தில் தனது மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இந்த மகிழ்ச்சியான விஷயத்தை ரசிகர்களுக்கு அட்லீ தெரியப்படுத்தி இருந்தார். இந்நிலையில் சமீபத்தில் ப்ரியா அட்லீக்கு வளைகாப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் திரை துறையைச் சார்ந்த பல பிரபலங்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் தளபதி விஜயும் கலந்து கொண்டிருந்தார். இப்போது விஜய் வாரிசு படத்தில் நடித்துள்ளார். இந்த படம் பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆக உள்ளது. இந்நிலையில் விஜய்க்கு ஆஸ்தான இயக்குனர் என்றால் அட்லீ தான். அதாவது விஜய் வைத்து தெறி, மெர்சல், பிகில் என தொடர்ந்து படங்களை இயக்கி வெற்றி கொடுத்துள்ளார்.

Also Read : இந்த இங்கிலீஷ் படத்தின் காபிதான் தளபதி-67 கதையா.? அட்லீ போல சிக்கலில் மாட்டிய லோகேஷ்

இதனால் விஜய்க்கு மிகவும் நெருக்கமாக அட்லீ பார்க்கப்படுகிறார். மேலும் அட்லீ பிரியா திருமணத்தில் தனது மனைவி சங்கீதா உடன் விஜய் பங்கு பெற்றிருந்தார். இப்போது வளைகாப்புக்கு விஜய் நேரில் வந்த இவர்களுக்கு வாழ்த்துக்கள் கூறியதுடன், பரிசு ஒன்றையும் வழங்கியுள்ளார்.

இப்போது அட்லீ, பிரியாவுடன் விஜய் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும் பிகில் படத்தில் விஜயின் ராயப்பன் கதாபாத்திரத்தை வைத்து ஒரு படம் எடுக்க ஆசையாக இருப்பதாக அட்லீ சமீபத்தில் இருந்தார். இது விரைவில் நடக்க வேண்டும் என விஜய் ரசிகர்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.

priya-atlee-baby-shower-function

Also Read : எரிகிற தீயில் எண்ணெய்யை ஊற்றிய தில் ராஜ்.. விஜய் கூட கட்டுப்படுத்தாத பரிதாபம்

Trending News