திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

மாஸ் ஹீரோவை நட்பு வட்டாரத்தில் இருந்து விரட்டிய விஜய்.. பிடிக்காத கூட்டணியால் வந்த வினை

விஜய் வெளியில் அதிகம் பேச மாட்டார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஆனால் அவருக்கென்று குறுகிய நட்பு வட்டாரம் ஒன்று உள்ளது. அதாவது சின்னத்திரை நடிகர் சஞ்சீவ், ஸ்ரீகாந்த், ஸ்ரீமன் இவர்களெல்லாம் விஜய்யின் நெருங்கிய நண்பர்கள். இவர்களுடன் இருக்கும் போது விஜய் மிகவும் கலகலப்பாக பேசுவாராம்.

இவர்கள் கல்லூரி காலத்தில் இருந்தே நட்பாக பழகி வருகிறார்கள். இதுபோக சினிமாவிலும் விஜய்க்கு சில நண்பர்கள் உள்ளார்கள். இசையமைப்பாளர் அனிருத் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் உடன் விஜய் நெருங்கி பழகி வருகிறார். பீஸ்ட் படத்தில் கூட அனிருத் இசையில் சிவகார்த்திகேயன் ஒரு பாடல் எழுதி இருந்தார்.

Also Read : விஜய்க்கு போன் போட்ட யாஷ்.. ராக்கி பாய் சொன்னதை கேட்டு துள்ளி குதித்த தளபதி

மேலும் சில வருடங்களுக்கு முன்பு விஜய்யின் இடத்தை சிவகார்த்திகேயன் நெருங்கி வருகிறார் என்று கூறப்பட்டது. ஏனென்றால் ஃபேமிலி ஆடியன்ஸ் என்பது விஜய்க்கு தான் இருக்கிறது. அதை கொஞ்சம் கொஞ்சமாக சிவகார்த்திகேயனும் பெற்று வருகிறார் என்று கூறப்பட்டது.

ஆனால் சிவகார்த்திகேயன் மற்றும் விஜய் இருவரும் நீண்ட காலமாக நெருங்கி பழகி வருகிறார்கள். இந்த சூழலில் இவர்களின் நட்பு இடையே ஒரு பிளவு ஏற்பட்டுள்ளதாம். இதற்கு காரணம் என்னவென்றால் சிவகார்த்திகேயன் தற்போது அஜித்தின் பக்கம் சென்று விட்டார் என கூறப்படுகிறது.

Also Read : லியோக்கு அடுத்த ஆப்பு ரெடி.. விஜய்யை விடமால் செக் வைத்து துரத்தும் உதயநிதி

அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் இடையே காலம் காலமாக மிகப்பெரிய போரே போய்க்கொண்டிருக்கிறது. கடைசியாக விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு படங்கள் மோதிக்கொண்ட போது இணையத்தில் பிரளயமே ஏற்பட்டது. இவ்வாறு இரண்டு நடிகர்கள் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.

இந்த ஆண்டும் லியோ படத்திற்கு போட்டியாக அஜித்தின் ஏகே 62 படம் வெளியிட திட்டமிட்டுள்ளனர். இந்த நேரத்தில் சிவகார்த்திகேயன் விஜய்யின் நட்பை உதாசீனப்படுத்திவிட்டு அஜித்தை நாடியது தளபதிக்கு எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது. ஆகையால் தனது நட்பு வட்டாரத்திலிருந்து சிவகார்த்திகேயனை ஒதுக்கி வைத்துள்ளாராம்.

Also Read : விஜய், சூர்யாவை கலாய்த்த காண்ட்ராக்டர் நேசமணி வைரல் போஸ்டர்.. லியோவுக்கு வந்த சோதனை

Trending News