வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

பழக்க வழக்கெல்லாம் புறவாசலோட போயிரணும்.. தம்பியை தவிர மற்ற இயக்குனர்களை மதிக்காத விஜய்

Thalapathy Vijay-Atlee: நடிகர் விஜய் பொதுவாகவே அவ்வளவு தாராளமாக பேசி, பழகும் ஆளில்லை என்பது அனைவரும் அறிந்த விஷயம் தான். அவரைப் பற்றி பேசும் பிரபலங்கள் எல்லோருமே சொல்லும் ஒரே வார்த்தை அவர் ரொம்பவும் அமைதியானவர் என்பதுதான். அவ்வளவாக யாருடனும் நெருங்கி பழகி, நட்பு வளர்த்துக் கொள்ளும் பேர்வழி அவர் இல்லை.

தன்னுடன் நடிக்கும் சக கலைஞர்களுக்குத்தான் அந்த நிலைமை என்று பார்த்தால், தன்னை வைத்து ஹிட் படங்கள் கொடுத்த இயக்குனர்களுடனும் அதே தூரத்தில் தான் பழகி வருகிறாராம் விஜய். ஒரு படத்திற்கு எத்தனை நாட்கள் கால் சீட் கொடுக்கிறாரோ, அவ்வளவுதான் அவருக்கும் அந்தப் படத்தின் இயக்குனருடன் இருக்கும் உறவு.

Also Read:லியோ காட்டிய பயத்தில் செப்டம்பரில் வெளிவரும் 30 படங்கள்.. ஒரு ஹிட்டுக்காக தவமிருக்கும் ஜெயம் ரவி முதல் சசிகுமார் வரை

பட வேலைகள் முடிந்த பிறகு விஜய் அந்த இயக்குனர்களுடன் எந்த ஒரு தொடர்பும் வைத்துக்கொள்ள மாட்டாராம். பழக்க வழக்கம் எல்லாம் புறவாசலோடு போயிடனும் என்பது போல், இயக்குனர் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், படம் முடிந்த பிறகு அப்படியே கை கழுவி விட்டு விடுவது தான் விஜய்யின் இத்தனை வருட பழக்கமாக இருக்கிறதாம். அந்த வரிசையில் தான் இயக்குனர்கள் நெல்சன், ஏ ஆர் முருகதாஸ் போன்றவர்கள் எல்லோரும்.

நடிகர் விஜய்யின் பழக்கவழக்கங்கள் இப்படி இருக்க இயக்குனர் அட்லி மட்டும் அவருடன் தொடர்ந்து மூன்று படங்களில் பணியாற்றி இருக்கிறார். அது மட்டும் இல்லை, விஜய் நடித்த நண்பன் படத்தில் அட்லி தான் உதவி இயக்குனர். அந்த படத்தில் அவருடன் நடித்த ஜீவா மற்றும் ஸ்ரீகாந்த், படத்தின் இயக்குனர் சங்கருடன் கூட விஜய் தொடர்ந்து பழகவில்லை. ஆனால் அந்த படத்தில் இருந்து அட்லி உடன் பயணித்து வருகிறார்.

Also Read:செப்டம்பர் 7ஐ குறி வைத்து வெளியாகும் 6 படங்கள்.. 600 கோடி வசூலை தாண்டி ஓடிடிக்கு வந்த ஜெயிலர்

ஒரு இயக்குனருக்கு விஜய் தொடர்ந்து மூன்று படங்களில் வாய்ப்பு கொடுத்திருக்கிறார் என்றால் அது அட்லிக்கு மட்டும்தான். மேலும் இவர் எந்த மேடையில் பேசினாலும், நான் நினைத்தால் அவரை நேரில் பார்த்து விடுவேன், அவருடன் தொலைபேசியில் பேசினேன், விஜய் தான் என்னுடைய அண்ணன் என ரொம்பவும் உரிமையாக சொல்லி வருகிறார்.

விஜய்க்கு பிளாக்பஸ்டர் கொடுத்த இயக்குனர்களை கூட அவர் கண்டுகொள்ள மாட்டார், தொடர்பு கொள்ள மாட்டார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். அப்படி இருக்கும் பொழுது அட்லி மற்றும் விஜய்க்கு ஏன் அவ்வளவு ஸ்பெஷல் என எல்லோருக்குமே மிகப்பெரிய சந்தேகம் இருந்து வருகிறது. விஜய் அடுத்தும் தன்னுடைய பாசமான தம்பியுடன் படம் பண்ணுவார் என சொல்லப்படுகிறது.

Also Read:காக்கா உட்கார பனம்பழம் விழுந்த கதைதான் ஜெயிலர், விக்ரம் வெற்றி.. விஜய் தான் எப்போதுமே நம்பர் ஒன்

 

Trending News