தளபதி விஜய் மற்றும் சூர்யா இருவரும் நீண்ட காலமாக நண்பர்களாக வலம் வருகின்றன. ஒரு காலத்தில் இருவரும் இணைந்து நடித்த படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் அடித்த நிலையில் தற்போதைய முன்னணி நடிகர்களாக ஜொலித்து கொண்டிருக்கின்றனர். விஜய் மற்றும் சூர்யா இருவருமே தங்களுடைய சினிமா கேரியரில் வெவ்வேறு பாதைகளில் பயணித்துக் கொண்டிருக்கின்றனர்.
இருவரது படங்களும் மிகப்பெரிய வசூலை வாரிக் குவித்துக் கொண்டிருக்கிறது. ஒரு காலத்தில் நண்பர்களாக நடித்த விஜய் மற்றும் சூர்யா இருவரும் தற்போது மீண்டும் ஒரே படத்தில் இணைத்து நடிப்பார்களா என்பது கேள்விக்குறிதான். ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு இன்னமும் அப்படியேதான் இருக்கிறது.
அந்த வகையில் கடைசியாக வெளியான சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படமும் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன. முன்னதாக சூரரைப்போற்று மற்றும் மாஸ்டர் இரண்டு படங்களும் ஒரே தேதியில் வெளியாக இருந்த நிலையில் எதிர்பாராத சூழ்நிலையில் அது நடக்க முடியவில்லை.
இந்நிலையில் விஜய் மற்றும் சூர்யாவுடன் ஆரம்ப காலத்தில் பணியாற்றிய பிஆர்ஓ நிகில் என்பவர் விஜய் ஒரு நண்பராக சூர்யாவுக்கு செய்த உதவியை 23 வருடம் கழித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். சூர்யாவுக்கு முன்பே விஜய் நடிக்க வந்துவிட்டார். சில வெற்றிகளையும் பார்த்துவிட்டார். இந்நிலையில் சூர்யா மற்றும் விஜய் இருவரும் இணைந்து நடித்த முதல் படம் என்றால் அது நேருக்கு நேர் படம்தான். அதில் சூர்யாவை விட விஜய்யின் முகம் அனைவருக்கும் பரிச்சயமாக இருந்தது.
இந்நிலையில் அந்த படத்தில் பிஆர்ஓவாக பணியாற்றிய நிகிலை கூப்பிட்டு வளர்ந்து வரும் நடிகராக இருக்கும் சூர்யாவின் விளம்பரங்களை அதிகமாக கொடுங்கள் எனக் கூறியுள்ளார். இதுதான் தளபதி விஜய்யின் பெருந்தன்மை என அவர் கூறியுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சூர்யா மற்றும் விஜய் இருவரும் இணைந்து நேருக்கு நேர், பிரண்ட்ஸ் போன்ற படங்களில் நடித்துள்ளனர். மேலும் சூர்யா நடத்தும் அகரம் பவுண்டேஷன் நிறுவனத்திற்காக விஜய் ஒரு விளம்பரப் படத்தில் இணைந்து நடித்தார் குறிப்பிடத்தக்கது.