செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

ஒரே ஒரு போன் கால்.. கல்யாணம் பண்ணாத ஹீரோயினை விழுந்து விழுந்து கவனிக்கும் விஜய்

விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67  படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் 14 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் நடிகை திரிஷாவுடன் விஜய் இணைந்து நடிக்கப் போகிறார்.

இதனால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்திருக்கிறது. ஏற்கனவே விஜய்-திரிஷா இருவரும் கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி போன்ற சூப்பர் ஹிட் படங்களில் ஜோடி சேர்ந்திருக்கிறார்கள். ஆனால் தளபதி 67  படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு திரிஷாவிற்கு எப்படி கிடைத்தது என்பது தற்போது வெளிவந்துள்ளது.

Also Read: அதே பொலிவுடன் இருக்கும் திரிஷா!

திரிஷா ஹிட் மூவி கொடுத்து ரொம்ப நாள் ஆனது. இப்பொழுது திரிஷா பெரிய நடிகர்களின் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்காமல் தவித்துக் கொண்டிருக்கிறார். இதனால் விஜய்யிடம் தொலைபேசியின் மூலம் தொடர்பு கொண்டு உதவி கேட்டிருக்கிறார்.

அதாவது ‘நீங்கள் அடுத்து நடிக்கப் போகும் தளபதி 67 படத்தில் எனக்கு சான்ஸ் கொடுங்கள்’ என்று கேட்டிருக்கிறார். அதனால் விஜய்யும் லோகேஷ் கனகராஜிடம் இதைப்பற்றி சொல்லி, தளபதி 67 படத்தில் அவர் கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்பை வாங்கிக் கொடுத்திருக்கிறார்.

Also Read: இப்பவும் ரசிகர்களை பித்து பிடிக்க வைக்கும் த்ரிஷாவின் 10 படங்கள்

கண்டிப்பாக தளபதி 67 படம் சூப்பர் ஹிட் ஆகும். அதன் பிறகு நமக்கு நிறைய படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு வரும் என்ற நோக்கத்தில்தான் விஜய்யிடம் திரிஷா உதவி கேட்டிருக்கிறார். அதுமட்டுமின்றி முழு ஆக்ஷன் படத்தில் திரிஷா வருவதற்கு அவர் விஜய்யிடம் உதவி கேட்டதால் தான் நடந்தது.

இல்லை என்றால் அவருக்கு முழு கேன்சஸ் படத்தில்தான் வாய்ப்பு வந்திருக்கும். இப்படி விஜய் பழைய கதாநாயகிக்கு விழுந்து விழுந்து உதவி செய்து, படுத்திருந்த அவரது சினிமா கேரியரை கை கொடுத்து தூக்கிவிட்டுள்ளார்.

Also Read: திரிஷாவின் மொத்த சொத்து மதிப்பு

Trending News