சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

விஜய்யின் சூப்பர் ஹிட் இயக்குனர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.. காரணம் கேட்டு பதறும் திரையுலகம்

Vijay Movie Director Passed Away: தளபதி விஜய்க்கு தமிழில் இரண்டு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் ஒருவர் திடீரென மரணம் அடைந்து இருக்கிறார். இவருடைய மரணம் சினிமா உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. ரசிகர்களும், பல சினிமா பிரபலங்களும் இவருடைய இறப்புக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

பாப்பன் பிரியபேட்டை பாப்பன் என்னும் படத்தின் மூலம் மலையாள சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர்தான் சித்திக். இவர் மலையாள இயக்குனராக இருந்தாலும் தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் சிறந்த படங்களை கொடுத்து அங்கேயும் தனக்கான அடையாளத்தை உருவாக்கியவர். சிறந்த இயக்குனர்களின் லிஸ்டில் இவரும் ஒருவர்.

Also Read:ரத்தினவேலுக்கு முன்பே அவர் அப்பாவை கொண்டாடிய 6 படங்கள்.. விஜய் மார்க்கெட்டை தூக்கி விட்ட இயக்குனர்

இயக்குனர் சித்திக் தளபதி விஜய்க்கு முதன் முதலில் கொடுத்த படம் பிரண்ட்ஸ். இந்த படம் இன்று வரை தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு படமாக இருக்கிறது. பிரண்ட்ஸ் படத்தின் காமெடி காட்சிகள் இன்று வரை பிரபலமாக இருப்பதற்கு சித்திக் தான் மிக முக்கிய காரணம். விஜய், சூர்யா போன்ற முன்னணி ஹீரோக்கள் இருந்த அந்த படத்தில், வடிவேலுக்கு சரியான கேரக்டரை கொடுத்து காமெடியில் ஜெயித்திருப்பார்.

அதன்பின்னர் விஜய்க்கு ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் தொடர்ந்து படங்கள் தோல்வி அடைந்த பொழுது, தமிழ் சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு பாலிவுட்டுக்கு சென்றிருந்த அசினை மீண்டும் தமிழ் சினிமாவுக்கு வரவைத்து, விஜய்க்கு காவலன் என்னும் சூப்பர் ஹிட் படத்தை கொடுத்திருந்தார் இயக்குனர் சித்திக். அதேபோன்று கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு எங்கள் அண்ணா என்னும் படத்தை கொடுத்து வெற்றி பெற்றிருந்தார்.

Also Read:ரஜினியை பிடிக்காதவர்கள் செய்யும் நச்சு வேலை.. தளபதியை வைத்து ஆடும் ஆடுபுலி ஆட்டம்

இதேபோன்று பல வெற்றி படங்களை கொடுத்த சித்திக் அவர்களுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாக நேற்று செய்திகள் வெளியாகி இருந்தது. சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அவர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.

தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து இயக்குனர் சித்திக் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார். இவர் ஏற்கனவே கல்லீரல் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தார். இவருடைய மறைவு இப்போது சினிமா உலகிற்கு மிகப்பெரிய இழப்பாக பார்க்கப்படுகிறது.

Also Read:ரஜினியை வைத்து விஜய்க்கு பதிலடி கொடுத்த எஸ்ஏசி.. வந்த வழி மறந்தோம்னா காணாம போயிடுவோம்

Trending News