சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

வெண்ணிலாவுக்காக காவிரியை உதாசீனப்படுத்தும் விஜய்.. சுயநலமாக யோசித்த யமுனாவுக்கு பதிலடி கொடுத்த கங்கா

Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், வெண்ணிலாவை காவேரி வீட்டிற்கு கூட்டிட்டு வந்த பிறகு விஜய் வெண்ணிலாவை நினைத்து பீல் பண்ணும் அளவிற்கு பக்கத்திலேயே இருந்து ஒவ்வொன்றாக பார்த்து செய்கிறார். ஆனால் அதே நேரத்தில் காவிரி என்ன மனநிலையில் இருப்பாள், கொஞ்சம் பேசி புரிய வைக்கலாம் என்று யோசிக்காத அளவிற்கு விஜய் இருக்கிறார்.

ஏதோ ஒரு லெட்டர் மூலம் மனசில் இருப்பதை எல்லாம் எழுதி வைத்துவிட்டு விஜய், வெண்ணிலாவை கூட்டிட்டு ஹாஸ்பிடலுக்கு காலையிலேயே கிளம்பி விடுகிறார். ஆனால் அந்த லெட்டரையும் காவேரி பார்க்க கூடாது என்பதற்காக ராகினி அதை கிழித்து விடுகிறார். பிறகு காலையில் எழுந்ததும் காவேரி, விஜய் எங்கே என்று தேடுகிறார்.

அப்பொழுது ராகினி அவர் காலையிலேயே வெண்ணிலவை கூட்டிட்டு கிளம்பிவிட்டார் என்று சொல்லி நோகடித்து பேசுகிறார். அங்கே கங்காவும் பக்கத்தில் இருந்ததால் ராகினிக்கு பதிலடி கொடுத்து காவிரியை கொஞ்சம் காப்பாற்றி விடுகிறார். அந்த சமயத்தில் யமுனா வந்து காவிரியிடம் அக்கறை இருப்பது போல் நீ ஏன் தேவையில்லாத வேலையை பார்த்து உன் தலையில் நீயே மண்ணை வாரி போட்டு விட்டாய் என்று கேட்கிறாய்.

இதற்கு பதில் சொல்ல தெரியாமல் காவேரி, நீங்கள் இரண்டு பேரும் இருங்க நான் காபி போட்டு கொண்டு வரேன் என்று சொல்லி போய் விடுகிறார். அப்பொழுது கங்காவிடம், யமுனா காவேரி தனியாக வந்து விட்டால் நவீன் காவிரியை நினைத்து பீல் பண்ண ஆரம்பித்து விடுவார். அப்படி என்றால் என்னுடைய வாழ்க்கை என்னவாக இருக்கும் என்ற பயத்தில் பேசுகிறார்.

இதைக் கேட்டதும் கங்கா, வாயை மூடு என்று சொல்லி யமுனாவை வெளியே கூட்டிட்டு வந்து இப்பொழுது கூட சுயநலமாக தான் யோசிப்பியா? உன் வாழ்க்கைக்காக காவிரி என்னெல்லாம் பண்ண என்று மறந்து விட்டாயா என்று திட்டி அனுப்பி விடுகிறார். காபி போடப் போன காவேரி, விஜய் பற்றி யோசித்து கொண்டே இருக்கிறார்.

உடனே விஜய்க்கு போன் பண்ணி பேசலாம் என்று காவேரி போன் பண்ணுகிறார். அந்த சமயத்தில் வெண்ணிலவை கூட்டிட்டு காரில் விஜய் போய்க் கொண்டிருக்கும் பொழுது ஒரு சின்ன விபத்து ஏற்படுகிறது. இதனால் காவேரி ஃபோனை அட்டென்ட் பண்ணி விட்டு பேச முடியாமல் காவிரி நான் உன்னை அப்புறமா கூப்பிடுகிறேன் என்று போனை கட் பண்ணி விடுகிறார்.

இதனால் காவேரி, விஜய் மொத்தமாக நம்மை விட்டு போய் விடுவாரோ, என்ற பயத்தில் மறுபடியும் அழ ஆரம்பித்து விடுகிறார். சந்தர்ப்பமும் சூழ்நிலையும் காவிரியை விஜய் உதாசீனப்படுத்துவது போல் இருந்தாலும் மனதில் என்ன இருக்கிறது என்று நேரடியாக ஒரு முறை காவிரியை பார்த்து பேசி விட்டால் எல்லா பிரச்சனைக்கும் தீர்வு கிடைத்துவிடும்.

Trending News