சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

லட்டு மாதிரி காதலரை தேடி பிடித்த பிகில் பட பிரபலம் ரெபா மோனிகா.. வைரலாகும் நெருக்கமான புகைப்படம்

தளபதி விஜய் நடிப்பில் 2019 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வசூலை பெற்ற திரைப்படம் தான் பிகில். அட்லீ இயக்கத்தில் ஸ்போர்ட்ஸ் டிராமாவாக உருவாகியிருந்த இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

குறிப்பாக பெண்கள் மத்தியில் பிரபலமாகி வசூலை அள்ளியது குறிப்பிடத்தக்கது. மேலும் பிகில் படத்தில் தளபதி விஜய்யை தொடர்ந்து பல இளம் நடிகைகள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றன.

அந்த வகையில் அம்ரிதா ஐயர் மற்றும் ரெபா மோனிகா ஜான் ஆகியோரை குறிப்பிட்டுச் சொல்லலாம். அமிர்தா ஐயர் ஏற்கனவே பல படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார். அதனைத் தொடர்ந்து ரெபா மோனிகாவுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறதாம்.

முன்னணி நடிகர்களின் படவாய்ப்புகள் இல்லை என்றாலும் கணிசமாக பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில் திடீரென தன்னுடைய காதலரை உலகுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார் ரெபா மோனிகா.

ரெபா மோனிகா தன்னுடைய நீண்ட காலம் சோமன் ஜோசப் என்பவருடன் நட்பு ரீதியாக பழகி வந்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் துபாய் சென்றிருந்த இடத்தில் ஜோசப் தன்னுடைய காதலை சினிமா ஸ்டைலில் மோதிரம் கொடுத்து ப்ரொபோஸ் செய்துள்ளார்.

reba-monica-boyfriend
reba-monica-boyfriend

உடனடியாக அவரது காதலுக்கு ஓகே சொல்லிவிட்டாராம் ரெபா மோனிகா. கேரியரை பற்றி கவலைப்படாமல் உடனடியாக காதலுக்கு ஒத்து கொண்டு விரைவில் திருமணம் செய்ய உள்ளது தயாரிப்பாளர்களுக்கு கொஞ்சம் யோசனையை கொடுத்துள்ளதாம்.

reba-monica-boyfriend-proposal
reba-monica-boyfriend-proposal

ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் தன்னுடைய திருமண வாழ்க்கையில் ஐக்கியமாக ரெடியாகி கொண்டிருக்கிறாராம் ரெபா மோனிகா. பிகில் படத்தில் முகத்தில் ஆசிட் ஊற்றிய பெண்ணாக நடித்து பலருக்கும் முன்னோடியாக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Trending News