திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

விஜய் இந்த படத்தில் மட்டும் நடிக்கலைனா சினிமாவை விட்டே போயிருப்பாராம்.. தளபதியை தக்கவைத்த மாஸ் படம்

தளபதி விஜய் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக விளங்கி வருகிறார். இதற்குக் காரணம் அவரது விடா முயற்சி என்று கூட சொல்லலாம். ஆனால் யாருமே இந்த இடத்திற்கு சிரமப்படாமல் வந்திருக்க முடியாது.

அதுமட்டுமல்லாமல் எந்த தொழிலாக இருந்தாலும் ஒரு சோதனை காலத்தை தாண்டி தான் வெற்றிகளை அமைந்திருக்கும். அப்படிதான் தளபதி விஜய்க்கு 2005 இல் இருந்து 2010 வரை. விஜய்யின் சினிமா வரலாற்றில் விஜய் சினிமாவில் நடிக்க வைக்க வேண்டாம் என்கிற அளவுக்கு பெரிய சர்ச்சைகளை ஏற்படுத்திய காலகட்டம்.

விஜய்யை நிறைய ரசிகர்கள் விட்டுச் சென்றதற்கு தொடர் தோல்விப் படங்கள் ஒரு காரணமாக இருக்கும். அந்த வகையில் தொடர்ந்து தோல்வியை சந்தித்துக் கொண்டிருந்த அவர் தளபதி விஜய். ஆனால் ஒரு காலகட்டத்தில் காதல் திரைப்படங்களாக நடித்து வந்த விஜய்க்கு ஆக்ஷன் படங்கள் செட் ஆகுமா என்பதை சோதனை செய்த படம் பகவதி. பெரிய அளவில் வெற்றி இல்லையென்றாலும் சொல்லிக்கொள்ளும்படி வெற்றியைப் பெற்றது அந்த படம்.

ஆனால் அதன்பிறகு தளபதி விஜய் நடிப்பில் ரமணா இயக்கத்தில் வெளிவந்த திருமலை படம் விஜய்க்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொடுத்தது என்றால் மிகையாகாது.

அந்த படம் வெளியாகும்போது தியேட்டருக்கு வெளியில் டிக்கெட் கிடைக்காமல் கூட்டம் அலை மோதியதை 90s கிட்ஸ் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. அந்தப்படம் மட்டும் ஓடவில்லை என்றால் விஜய் ஆக்சன் படங்களில் நடிக்க கூடாது என முடிவு எடுத்து இருந்தாராம்.

Trending News