விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர் படம் வருகின்ற பொங்கலை முன்னிட்டு ஜனவரி 13ம் தேதி உலகமெங்கும் தியேட்டர்களில் வெளியாக உள்ளது.
முதலில் 100 சதவிகிதம் தியேட்டர்களுக்கு அனுமதியளித்த தமிழ்நாடு அரசு தற்போது அந்த முடிவிலிருந்து பின் வாங்கியுள்ளது. ஆனால் மாஸ்டர் படக்குழு படத்தை வெளியிடுவதில் இருந்து பின்வாங்கவில்லை.
லாபமோ, நஷ்டமோ தியேட்டரில் வெளியிடலாம் என முடிவு செய்து அடுத்தடுத்து புரோமோஷன் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் விஜய்யின் சினிமா கேரியரில் மாஸ்டர் படம் முதல் முறையாக பல மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாவது குறிப்பிடத்தக்கது.
இது ஒருபுறமிருக்க தளபதி விஜய்யின் சமீபத்திய புகைப்படம் ஒன்று இணையதளங்களில் செம வைரல் ஆகியுள்ளது. பரட்டை தலை மற்றும் நரைத்த தாடியுடன் கருப்பு நிற உடையில் உள்ள புகைப்படம் தான் அது.
சமீபத்தில் இணையதளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற பாவ கதைகள் படத்தில் சுதா கொங்கரா இயக்கிய தங்கம் என்ற கதையில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் காளிதாஸ் ஜெயராம்.
காளிதாஸ் ஜெயராமன் நடிப்பை பார்த்து வியந்து போன தளபதி விஜய் அவரை தன்னுடைய அலுவலகத்திற்குள் கூப்பிட்டு புகைப்படம் எடுத்துக் கொண்டார். அந்த புகைப்படத்தை காளிதாஸ் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட அது திடீரென வைரல் ஆகியுள்ளது.
