விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த பொங்கலுக்கு வெளியாகி மிகப்பெரிய வசூலை வாரிக்குவித்த திரைப்படம் மாஸ்டர். கலவையான விமர்சனங்கள் வந்தாலும் வசூல் அமோகமாகவே இருந்துள்ளது.
மேலும் இதுவரை வரலாறு காணாத மக்கள் கூட்டம் தியேட்டரை நோக்கி படையெடுத்துள்ளனர். இதை மற்ற நடிகர்களின் ரசிகர்களும் அறிந்து கொண்ட உண்மை தான். நீண்ட நாட்களாக வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடந்த மக்கள் கூட்டம் கூட்டமாக மாஸ்டர் படத்தை கண்டு களித்தனர்.
இதனால் தமிழகத்தில் மட்டும் தற்போது வரை கிட்டத்தட்ட 141 கோடி வசூல் செய்துள்ளதாம் மாஸ்டர். ஆனால் பாகுபலி 2 படம் இதுவரை 148 கோடி வசூல் செய்த முதல் இடத்தில் உள்ளது. இந்த சாதனையை விஜய் படம் முறியடிக்கவில்லை.
ஆனால் பாகுபலி 2 படம் தமிழ் சினிமாவில் கொடுத்த ஷேர் ரெக்கார்டை முறியடித்து விட்டதாம் மாஸ்டர். அதாவது தமிழ் சினிமாவின் லாபக் கணக்கில் இதுவரை பாகுபலி 2 படம் மட்டுமே 78 கோடி லாபம் கொடுத்திருந்ததாம்.
ஆனால் தளபதி விஜய்யின் மாஸ்டர் படம் கடந்த வாரம் வரை சுமார் 80 கோடி வரை லாபம் கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. முதல் நாள் மட்டுமே வசூல் நிலவரத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு அதன் பிறகு தற்போது வரை வசூல் நிலவரங்களை வெளியிடவில்லை.
இருந்தாலும் விநியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர் உரிமையாளர்கள் கூறுவதை வைத்துப் பார்க்கும்போது தற்போது தமிழ் சினிமாவில் இருக்கும் நடிகர்களில் நம்பர் ஒன் இடத்தை தளபதி விஜய் பிடித்துள்ளார். மேலும் சமீபகாலமாக விஜய் சாதனைகளை முறியடிப்பதைவிட சாதனைகளைச் செய்துகொண்டிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.