வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

எனக்கு ஹிட்டு வேணும், ஒழுங்கா என் படத்துல நடி.. மாஸ்டர் பட நடிகரை மடக்கிப் போட்ட பிரசாந்த்

நடிகர் பிரசாந்த்(prashanth) ஒரு காலத்தில் இளம் ரசிகைகள் மத்தியில் அப்படி ஒரு வரவேற்பை பெற்று வைத்திருந்தார். ஆனால் கடந்த சில வருடங்களில் அவரது வாழ்க்கையில் நடந்த சில குளறுபடிகளால் தன்னுடைய மார்க்கெட்டை இழந்து தற்போது அதை மீட்கப் போராடிக் கொண்டிருக்கிறார்.

உண்மையிலேயே ரஜினிக்கு அடுத்த இடத்தில் இருக்க வேண்டியது பிரசாந்த் தான். இதை அனைத்து ரசிகர்களும் ஒப்புக்கொள்வார்கள். அந்த அளவுக்கு தன்னுடைய படங்களின் மூலம் உச்சத்தை தொட்டு கொண்டிருந்தார்.

திடீரென அவரது வாழ்க்கையில் ஏற்பட்ட சில பிரச்சனைகள் அவரை விழுங்கியது. அதன் பிறகு படங்களில் நடித்தாலும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு கதைகள் பிரமாதமாக இல்லை. இதன் காரணமாக பிரசாந்தை ஒரு கட்டத்தில் ரசிகர்கள் மறந்தே விட்டனர்.

இடையில் அவ்வப்போது படங்களில் நடித்து வந்தாலும் எந்த ஒரு படமும் வெற்றி பெறாததால் ரொம்ப தடுமாறி விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். இருந்தாலும் ஃபீனிக்ஸ் பறவை போல் மீண்டும் வருவேன் என தற்போது தன்னுடைய செகண்ட் இன்னிங்சை தொடங்கியுள்ளார்.

பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டடித்த அந்தாதூண் படத்தின் தமிழ் ரீமேக்கான அந்தகன் படத்தில் நடித்து வருகிறார். இதில் சிம்ரன், பிரியா ஆனந்த், சமுத்திரகனி என ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் கவனமாக தேர்வு செய்து வருகின்றனர்.

அந்தவகையில் விஜய்யின் மாஸ்டர் மற்றும் பிகில் போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று பூவையார் என்பவர் தற்போது பிரசாந்தின் அந்தகன் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம்.

poovaiyar-vijay-master
poovaiyar-vijay-master

Trending News