விஜய் படங்களுக்கு மட்டும் முதல் நாள் முதல் காட்சியே படம் நன்றாக இல்லை என கிளப்பி விடுவதற்காக ஒரு கூட்டமே வேலை செய்து கொண்டிருக்கிறது. ஆனால் அதையெல்லாம் மீறி விஜய் படம் வேற லெவல் வசூல் செய்து வருவது தான் உண்மை.
அந்த வகையில் விஜய் தன்னுடைய சினிமா கேரியரில் மிகப்பெரிய ரிஸ்க் எடுத்து வெளியிட்ட திரைப்படம் தான் மாஸ்டர். ஆனால் அந்த ரிஸ்க் அவருக்கு மிகப்பெரிய அந்தஸ்தை கொடுத்து விட்டது என்றே சொல்லலாம்.
அந்த அளவுக்கு படத்தின் வசூல் இருக்கிறதாம். மேலும் படம் தியேட்டரில் வெளியாகி அடுத்த பதினைந்தாவது நாளே அமேசான் தளத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது. இதனால் விஜய்யை பிடிக்காதவர்கள் உடனடியாக படம் படுதோல்வி அடைந்ததால் தான் அமேசானுக்கு கொடுத்து விட்டார்கள் என கிண்டல் செய்தனர்.
ஆனால் இங்க கதையே வேற. மாஸ்டர் படம் வெளியான இரண்டு வாரத்திலேயே தமிழ்நாட்டில் மிகப்பெரிய வசூலை வாரி குவித்தது. அதுமட்டுமில்லாமல் அமேசானில் வெளியான அந்த வாரமே தியேட்டர்களில் கூட்டம் அலைமோதியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் தற்போது வரை கிட்டத்தட்ட 135 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாம் மாஸ்டர். உலக அளவில் 250 கோடியை தாண்டி விட்டதாக சொல்கிறார்கள். கிட்டத்தட்ட மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளரான சேவியர் பிரிட்டோ மற்றும் லலித் குமார் ஆகிய இருவருக்கும் லாபமே 100 கோடி வரை கிடைத்துள்ளதாம்.
இது பலருக்கும் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்த கொரானா சூழ்நிலையில் கூட விஜய் படம் இவ்வளவு வசூல் செய்கிறது? என தெரியாமல் குழம்பிப் போய் கிடக்கிறார்களாம்.