தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் மாஸ்டர் ரிலீஸ் வேலைகள் பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் தளபதி 65 பட ஹீரோயின் செய்தியும் ரசிகர்களுக்கு கூடுதல் போனசாக கிடைத்துள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிக்க உள்ள தளபதி 65 திரைப்படத்தைப் பற்றி ஏற்கனவே முடிவு செய்ததுதான். ஆனால் யார் இயக்குனர்? என்பதில் பல குளறுபடிகள் நடந்தன.
முருகதாஸுடன் விஜய் கூட்டணி சேர இருந்தது விஜய் ரசிகர்களுக்கே கொஞ்சம் கனமான செய்தியாகத்தான் அமைந்தது. ஆனால் இறுதியில் முருகதாஸ் விலகிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் சமீபத்தில் தளபதி 65 படத்தின் இயக்குனர் கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் தான் என்பதை அதிகாரபூர்வமாக அறிவித்தனர். நெல்சன் இயக்கத்தில் அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது.

கடந்த சில வருடங்களாகவே இளம் இயக்குனர்களுடன் பணியாற்ற வேண்டுமென விருப்பப்பட்டு தொடர்ந்து ஒரு படம் இரண்டு படம் செய்த இயக்குனர்களுக்கு வாய்ப்பளித்துக் கொண்டிருக்கிறார் தளபதி விஜய்.
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 65 படத்தில் விஜய்யுடன் முதன் முறையாக பூஜா ஹெக்டே என்ற நடிகை ஜோடி போட உள்ளாராம். முதலில் ரஷ்மிகா மந்தனா பேசப்பட்ட நிலையில் இறுதியில் பூஜா ஹெக்டே உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

பூஜா ஹெக்டே ஏற்கனவே மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியான முகமூடி என்ற தோல்வி படத்தில் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.