வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

அண்ணாத்த படத்தில் ரஜினிக்கு வில்லன் ஆன முரட்டு ஆள்.. இவர் தெறி, சுல்தான் பட பிரபலமாச்சே!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகிவரும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது ஹைதராபாத்தில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இன்னும் 20 நாட்களில் மொத்த படப்பிடிப்பும் முடிவடைய உள்ளதாம்.

ஏற்கனவே அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு கிட்டதட்ட ஒரு வருடங்களுக்கு மேலாக பாதி பாதியாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் எப்படியாவது படத்தை முடித்துவிட வேண்டும் என்ற வேகத்தில் படக்குழுவினர் செயல்பட்டு வருகின்றனர்.

தற்போது மீண்டும் கொரானா பரவால் அதிகரித்துள்ளதால் மீண்டும் தன் படப்பிடிப்பு தடைபட்டு விடுமோ என்ற அச்சத்தில் இரவு பகல் பாராமல் படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர். ரஜினியும் அதற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறாராம்.

இந்நிலையில் அண்ணாத்த படத்தில் வில்லனாக விஜய்யின் தெறி மற்றும் கார்த்தியின் சுல்தான் படங்களில் நடித்த அர்ஜய் என்பவர் நடித்து வருகிறார். அண்ணாத்த படத்தில் இவருக்கு ஒரு முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளதாம்.

மேலும் அண்ணாத்த படப்பிடிப்பில் ரஜினி மிகவும் சுறுசுறுப்பாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் படையப்பா, அருணாச்சலம் போன்ற படங்களில் பார்த்த ரஜினியை அண்ணாத்த படத்தில் பார்க்கலாம் எனவும் தலைவர் ரசிகர்களை உசுப்பேற்றியுள்ளார்.

அண்ணாத்த படத்தில் ரஜினியுடன் மீனா, குஷ்பூ, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி, சதீஷ் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். டி இமான் இசையமைக்கும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது. மேலும் 2021 தீபாவளிக்கு அண்ணாத்த படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

rajini-arjay-cinemapettai
rajini-arjay-cinemapettai

Trending News