வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

திருப்பாச்சி விஜய் தங்கச்சியா இது? 44 வயதில் பனியனுடன் பட்டையை கிளப்பும் லேட்டஸ்ட் போட்டோ

விஜய் நடிப்பில் பேரரசு இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளியாகி பட்டி தொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பிய படம்தான் திருப்பாச்சி. அந்த படத்தில் விஜய்க்கு அடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் என்றால் அது நடிகை மல்லிகா தான்.

2002ஆம் ஆண்டு சேரன் இயக்கிய ஆட்டோகிராப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் மல்லிகா. பிரபல மலையாள நடிகையான இவர், ஆட்டோகிராப் படத்திற்கு பிறகு பல தமிழ் படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார்.

ஆனால் விஜய்யுடன் நடித்த திருப்பாச்சி படம் தான் இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது. அதன்பிறகு பேரரசு இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் வெளியான திருப்பதி படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதன் பிறகு ஜெயம் ரவி நடிப்பில் உனக்கும் எனக்கும் படத்தில் நடித்தார். பின்னர் மலையாளத்தில் செட்டிலான இவரை மீண்டும் 2013 ஆம் ஆண்டு சென்னையில் ஒரு நாள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அழைத்து வந்தனர்.

ஆனால் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்காததால் திரும்பவும் மலையாள பக்கமே கம்பி நீட்டி விட்டார். அந்த படத்திற்கு பிறகு கடந்த ஆறு வருடமாக எந்த ஒரு படத்திலும் நடிக்காமல் இருந்து வருகிறார் மல்லிகா.

தற்போது 44 வயதை எட்டியிருக்கும் மல்லிகா சமீபத்தில் மாடர்ன் உடையில் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார். அதில் பனியனுடன் பாவாடை அணிந்து கொண்டு அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

mallika-tirupachi-actress
mallika-tirupachi-actress

Trending News