வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

விஜய் நல்ல நடிகர், ஆனா ஒரு பிரச்சனை.. விஜய்69 படத்தில் நடிப்பது பற்றி சூப்பர் ஸ்டார்

தளபதி விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை ஆரம்பித்த கையோடு, தான் ஒப்புக்கொண்ட படங்களில் மட்டும் நடித்துக் கொடுத்துவிட்டு, சினிமாவில் இருந்து விலகி முழு நேர அரசியலில் ஈடுபடப் போவதாக தெரிவித்தார். அதையே முதல் மாநாட்டிலும் உறுதிப்படுத்தினார்.

அதன்படி, தற்போது விஜய்69 படத்தில் ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருடன் இணைந்து பூஜா ஹெக்டே, அனிமல், கங்குவா பட புகழ் பாபி தியோல், பிரகாஷ்ராஜ், கெளதம் மேன், மமிதா பைஜூ, பிரியாமணி, நரேன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படத்துக்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசையமைக்கிறார். ரூ.300 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தை கேவிஎன் புரடக்சன் நிறுவனம் தயாரித்து வருகிறது.

விஜயின் கடைசிப் படம் என்பதால் இப்படத்தை ஹுட்டகும் முயற்சியில் ஹெச். வினோத் ஈடுபட்டுள்ளார். அரசியல், சமூக அக்கறை கொண்டமாக படமாக உருவாகும் இப்படத்தில் விஜய் போலீஸ் அதிகாரியாக வருவதாக தகவல் வெளியாகிறது.

இப்படத்தை பான் இந்தியா படமாக ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு வரும் நிலையில், இப்பத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமாரை விஜய்69 படக்குழுவினர் அணுகியுள்ளனர்.

விஜய்69 படத்தில் சிவராஜ்குமார்?

ஏற்கனவே ஜெயிலர் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் நண்பராக வந்து திரையில் மேஜிக் செய்து ஆக்சனில் அதகளம் செய்த சிவராஜ்குமார் இப்பத்தில் நடித்து வருகிறாரா? என கேள்வி எழுந்து. இதுகுறித்து அவர் பேட்டியில் கூறியதாவது;

”விஜய் படத்தில் நல்ல கேரக்டர் ஒன்றுக்கு என்னை கேட்டிருந்தார்கள். விஜய் படம், அப்படத்தின் கதை எனக்குப் பிடித்திருந்தாலும், எனது கால்ஷீட் தேதிகள் வைத்துத்தால் அப்படத்தில் நான் நடிக்கிறேனா இல்லையா என்பது தெரியும் என்று ஓபனாகத் தெரிவித்துள்ளார். மேலும், தனிப்பட்ட முறையில் அவரது கடைசிப்படம் இதுவென கூறக் கூடாது. அவர் நல்ல நடிகர். சினிமா , அரசியல் இரண்டிலும் அவர் சிறந்து விளங்குவார் . அவரது அரசியல் பார்வை நன்றாக உள்ளது. அதற்காக நான் அவரை மதிக்கிறேன்” என்று பாராட்டியுள்ளார்.

விஜயுடன் நடிக்க ரெடி, ஆனால் கால்ஷீட் தான் பிரச்சனை என அவரே கூறியிருக்கும் நிலையில், ‘ஜெயிலர் பட வெற்றிக்கு சிவராஜ்குமாரும் ஒரு காரணம், அதேபோல் கேப்டன் மில்லர் படத்திலும் தனுஷுடன் நடித்திருந்தார். இந்த இரண்டு படமும் சூப்பர் ஹிட். அதனால் எப்படியாவது, விஜய்69 பட த்தில் அவர் கால்ஷூட் ஒதுக்கி இப்படத்தை மறக்க முடியாத பிளாக் பஸ்டர் ஹிட்டாக கொடுக்க வேண்டும்’ என விஜய் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

மேலும், தோள் கொடுப்பான் தோழன் என்றபடி, விஜயும் இங்கு மாஸ் ஹீரோ, இப்படத்தின் நடிப்பதன் மூலம் அவரது ஃபேன்ஸ் எண்ணிக்கையும், மார்க்கெட்டும் சூடுப்பிடிக்கலாம் அதனால் சிவராஜ்குமார் இப்படத்தில் நிச்சயம் நடிக்ககூடும் என சினிமா விமர்சகர்களூம் என கூறி வருகின்றனர்.

Trending News