தற்போது சோசியல் மீடியா பெருகிவிட்ட காலகட்டத்தில் நாம் எந்த செய்தியாக இருந்தாலும் உடனுக்குடன் தெரிந்து கொள்கிறோம். அதுவும் சினிமா சார்ந்த புதுப்புது அப்டேட்களை பற்றி சினிமா ரசிகர்கள் ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சோஷியல் மீடியாக்களின் மூலம் ஈசியாக அறிந்து கொள்கின்றனர்.
அதில் பெரும்பாலான ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த நடிகர்கள் குறித்த விஷயங்களை சோசியல் மீடியாவில் ட்ரெண்ட் செய்து வருவது இப்போது வழக்கமாகி விட்டது. அந்த வகையில் தற்போது சோசியல் மீடியாவை கலக்கி வரும் ஒரே நடிகர் என்றால் அது தளபதி விஜய் மட்டும் தான்.
இவர் பற்றிய ஏதாவது ஒரு செய்தி வெளியானால் அது சர்வதேச அளவில் ட்ரெண்டாகி வருகிறது. அதுமட்டுமல்லாமல் கூகுள் தளத்தில் ரசிகர்களால் தேடப்பட்ட பிரபலங்களில் நடிகர் விஜய் தான் அதிகம் தேடப்பட்ட நடிகராக முதலிடத்தை பிடித்துள்ளார்.
இது இந்தியாவில் மட்டுமல்லாமல் கனடா, சிங்கப்பூர், மலேசியா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளிலும் விஜய் தான் முதல் இடத்தை பிடித்துள்ளார். இந்தியாவைக் காட்டிலும் வெளிநாடுகளில் இருக்கும் மக்கள் விஜய் சம்பந்தப்பட்ட விஷயங்களை அதிகம் பார்ப்பதாக தகவல்கள் கூறுகின்றது.
தற்போது விஜய் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் மற்றும் அவர் நடித்துக்கொண்டிருக்கும் திரைப்படத்தின் அப்டேட் போன்றவை அதிக அளவில் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. மேலும் சமீபத்தில் வெளியான அரபிக் குத்து பாடல் போன்று விஜய் சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களும் அதிக பார்வையாளர்களை கடந்து முன்னிலை வகிக்கிறது.
இதனால் தற்போது விஜய் சோசியல் மீடியாவை ஆட்டிப்படைக்கும் ஒரு நபராக இருக்கிறார். இந்த விஷயம் தற்போது விஜய்யின் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது. அதுமட்டுமல்லாமல் விஜய்க்கு அடுத்த இடத்தில்தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இருக்கிறார். அவருக்கு அடுத்த இடத்தில் அஜித் இருக்கிறார். இப்படி சூப்பர் ஸ்டாரையே பின்னுக்கு தள்ளிய பெருமை தற்போது விஜய்க்கு கிடைத்துள்ளது.