திங்கட்கிழமை, ஜனவரி 27, 2025

தில் ராஜ் மீது கோபத்தில் இருக்கும் விஜய்.. வாரிசு படத்தால் ஏற்பட்ட மனஸ்தாபம்

தளபதி விஜய் தெலுங்கு இயக்குனர் வம்சி மற்றும் தயாரிப்பாளர் தில் ராஜு கூட்டணியில் உருவான வாரிசு படத்தில் நடித்திருந்தார்.இதனால் இப்படம் தெலுங்கு சாயலில் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்து வருகிறது. ஆனாலும் ஆந்திராவில் வாரிசு படம் நல்ல வசூலை ஈட்டி வருவதாக தொடர்ந்து தகவல் வெளியாகி வருகிறது.

இந்நிலையில் தயாரிப்பாளர் தில் ராஜூ மீது விஜய்க்கு கோபம் உள்ளதாம். சாதாரணமாக பெரிய நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் தான் எல்லா மொழிகளிலும் வெளியாகும். இதனால் வசூலை அள்ள முடியும். ஆனால் தமிழில் வாரிசு படம் ஜனவரி 11ஆம் தேதி வெளியான நிலையில் தெலுங்கில் இரண்டு நாட்கள் தள்ளி வெளியானது.

Also Read : வாரிசு, துணிவு எல்லாம் சும்மா டிரெய்லர் தான்.. மீண்டும் மோதும் விஜய், அஜித்

ஏனென்றால் அங்கு சிரஞ்சீவி மற்றும் பாலகிருஷ்ணா ஆகியோரின் படங்கள் வெளியானதால் தில் ராஜு வாரிசு படத்தை தள்ளி வெளியிட்டார். ஏனென்றால் தெலுங்கு சினிமாவில் உள்ள நடிகர்கள் குடும்பம் போல் ஒற்றுமையாக இருப்பதால் வாரிசு படத்தால் பிரச்சனை வரக்கூடாது என்பதால் இவ்வாறு முடிவு எடுத்திருந்தார்.

ஆகையால் தில் ராஜூ மீது விஜய்க்கு கோபம் ஏற்பட்டுள்ளது. இதனால் தான் தெலுங்கு ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் விஜய் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி சமீபத்தில் வம்சி மற்றும் தில்ராஜு இருவரும் விஜய்யை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

Also Read : படத்திற்கு குஷ்பூ சீன் தான் முக்கியம்.. வாரிசு பட எடிட்டரின் பரபரப்பான பேட்டி

அப்போது கூட விஜய், தில் ராஜுவிடம் சம்பிரதாயத்திற்கு மட்டுமே பேசியதாக கோலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி தில் ராஜுவை தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியது விஜய் தான். ஆனால் இப்போது சிவகார்த்திகேயன், தனுஷ் என அடுத்தடுத்த நடிகர்களின் படத்தை தில் ராஜு தயாரிக்க உள்ளாராம்.

இதற்கான அட்வான்ஸ் தொகையையும் தற்போது இவர் கொடுத்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே வாரிசு படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் விஜய் பற்றி உயர்வாக பேசுவதாக நினைத்து பல சர்ச்சைகளில் தில் ராஜ் சிக்கி இருந்தார். இப்போது தமிழ் நடிகர்கள் படங்களை தயாரிப்பதில் ஆர்வம் செலுத்தி வருவதால் பல பிரச்சனைகளை சந்திக்க உள்ளார் என்று கூறப்படுகிறது.

Also Read : வாரிசு, துணிவு எது வெற்றி வாகை சூடியது.. ரெட் ஜெயிண்ட் ரிப்போர்ட்

Trending News