வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

என்னை விட விஜய் தான் பெஸ்ட்.. பெருமையாக சொன்ன மகேஷ் பாபு

தமிழ் சினிமாவில் விஜய் எப்படியோ அப்படித்தான் தெலுங்கு சினிமாவில் மகேஷ் பாபு. அவருக்கென ஒரு பெரும் கூட்டம் உள்ளது. தமிழ்நாட்டிலும் மகேஷ்பாபு படங்களுக்கு நல்ல வரவேற்பு இருப்பது குறிப்பிடத்தக்கது.

மகேஷ் பாபு மற்றும் ஏ ஆர் முருகதாஸ் கூட்டணியில் நேரடி தமிழ் படமாக வெளியான ஸ்பைடர் திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. ஆனால் அந்த படத்திற்கான புரமோஷன் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பின.

மகேஷ் பாபு மற்றும் விஜய் இருவருக்கும் இடையில் ஒரு நல்ல நட்பு இருப்பதை சமீபத்தில் விஜய் நிரூபித்தார். க்ளீன் இந்தியா சேலஞ்ச் என்பதை விஜய்க்கு பகிர்ந்திருந்தார் மகேஷ் பாபு. உடனடியாக விஜய் தன்னுடைய வீட்டில் செடி நட்டு வைத்து அந்த புகைப்படங்களை வெளியிட்டு மகேஷ்பாபு உடனான நட்பை உறுதிப்படுத்தினார்.

விஜய் மற்றும் மகேஷ்பாபு இருவருக்குமான நட்பு அவர்களது ஆரம்ப காலத்தில் இருந்தே இருக்கிறது. விஜய் பெரும்பாலும் தெலுங்கில் மகேஷ்பாபு நடித்து வெற்றி பெற்ற படங்களை தமிழில் ரீமேக் செய்து வந்தார். அது அவரது சினிமா கேரியரில் பெரிய அளவில் உதவியது.

தெலுங்கில் மகேஷ்பாபு நடித்த ஒக்கடு படம் தமிழில் கில்லி என்ற பெயரிலும், தெலுங்கில் போக்கிரி என்ற பெயரில் மகேஷ்பாபு நடித்த படம் தமிழிலும் போக்கிரி என்ற பெயரில் வெளியானது. இந்த இரண்டு படங்களும் விஜய்யின் சினிமா கேரியரில் வசூல் சாதனை செய்த படங்கள்.

இந்நிலையில் ஒரு பேட்டியில் மகேஷ் பாபு, தெலுங்கில் நான் நடித்த ஒக்கடு படத்தைவிட தமிழில் விஜய் நடித்த கில்லி திரைப்படம் சிறப்பாக இருந்ததாக ஒப்புக்கொண்டார். தெலுங்கில் மிகப் பெரிய நடிகராக இருக்கும் மகேஷ் பாபு விஜய் பற்றி சொன்னதிலேயே இருவருக்குமான நட்பு எந்த அளவில் இருக்கிறது என்பது ரசிகர்களுக்கு புரிந்துள்ளது.

vijay-mahesh-babu-cinemapettai
vijay-mahesh-babu-cinemapettai

Trending News