திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

லியோவை சுற்றி பின்னப்படும் 5 சதிவலைகள், குழப்பத்தில் விஜய்.. 500 கோடிக்கே திணறும் லோகேஷ்

Vijay-Leo: லோகேஷ், விஜய் கூட்டணியில் உருவாகி இருக்கும் லியோ விரைவில் வெளியாக இருக்கும் சூழலில் படத்திற்கு எதிராக பல சர்ச்சைகளும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் 500 கோடி வசூலுக்கே திணறும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.

இதற்கு முக்கிய காரணம் லியோவை சுற்றி பின்னப்பட்ட ஐந்து சதிவலைகள் தான். அதாவது ஹிந்தியில் இப்படம் மாஸாக வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில் ஓடிடி பிரச்சனையால் தற்போது அது இல்லை என்றாகி விட்டது. கேரளாவில் ரசிகர்கள் கொந்தளித்த விவகாரமும் பூதாகரமாக வெடித்துள்ளது.

Also read: லியோவுக்கும், ரெட் ஜெயண்ட்டுக்கும் சம்பந்தமில்ல.. உண்மையை உரைக்கிற மாதிரி சொல்லிய தயாரிப்பாளர்

சோசியல் மீடியாவில் மோகன்லால் மற்றும் விஜய் ரசிகர்களுக்கு இடையே நடந்த பிரச்சனையில் தற்போது கேரளாவில் படம் ஓடக்கூடாது என்ற குரல்கள் எழுந்துள்ளது. அப்படியே மீறி திரையிடப்பட்டாலும் ஸ்கிரீன் நிச்சயம் கிழியும் என ரசிகர்கள் ஆவேசத்துடன் கூறி வருகின்றனர்.

இது ஒரு புறம் இருக்க கர்நாடகாவில் தற்போது காவிரி நீர் தொடர்பான பிரச்சனை வலுவடைந்து கொண்டிருக்கிறது. இது காலம் காலமாக நடப்பது தான் என்றாலும் தற்போது தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Also read: ரிலீசுக்கு முன்பே பல நூறு கோடி கல்லா கட்டிய லியோ.. RRR வசூலை முறியடிக்க லோகேஷ் போட்ட திட்டம்

மேலும் தமிழ் படம் வெளியாக கூடாது என்ற பிரச்சனையும் ஒரு பக்கம் ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படி வெளிமாநிலங்களில் தான் பிரச்சனை என்று பார்த்தால் தமிழ்நாட்டிலும் படத்தை அதிகாலையில் திரையிடக்கூடாது என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டு இருக்கிறது.

அதுபோக லியோ ரிலீஸ் நேரத்தில் பான் இந்தியா படங்களும் வெளிவருகிறது. இப்படி நாலா பக்கமும் ஒரே பிரச்சனையாக இருப்பதால் விஜய் கடும் குழப்பத்தில் இருக்கிறாராம். அதேபோன்று 1000 கோடியை எதிர்பார்த்த லோகேஷ் இப்போது 500 கோடியை வசூலித்து பாதி கிணறாவது தாண்டுவோமா என்ற யோசனையில் இருக்கிறாராம்.

Also read: அப்பாவை சந்தித்த போது விஜய் போட்ட முக்கிய கட்டளை.. உங்க சங்கார்த்தமே வேண்டாம் என எஸ்ஏசி எடுத்த முடிவு

Trending News