வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

செமையாய் என்ஜாய் பண்ணும் விஜய்.. அந்த 2 பேரால் லியோ ஷூட்டிங் ஸ்பாட்டில் செம ரகளையாம்

லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ படத்தின் ஷூட்டிங் இப்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த படம் பற்றிய பேச்சு தான் இப்போது திரையுலகையே பரபரப்பாக்கி வருகிறது. அதிலும் கதை தொடர்பான பல செய்திகள் வெளிவந்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் லியோ ஷோட்டிங் ஸ்பாட்டில் இரண்டு நடிகர்கள் செம ரகளை செய்து கொண்டிருக்கிறார்களாம். அதாவது இப்படத்தில் லோகேஷ் ஒட்டுமொத்த நட்சத்திரங்களையும் இறக்கியுள்ளார். அந்த வகையில் விஜய்யுடன் இணைந்து திரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத் ஆகிய பல முன்னணி பிரபலங்களும் நடித்து வருகின்றனர்.

Also read: நடிப்பை தாண்டி ஷாப்பிங் மாலில் அதிகம் முதலீடு செய்யும் விஜய்.. மூக்கு மேல விரல் வச்சு பார்க்கும் திரையுலகம்

பொதுவாக இரண்டு மூன்று பிரபலங்கள் இருந்தாலே அந்த இடத்தில் கலகலப்புக்கு பஞ்சம் இருக்காது. அதில் இத்தனை நட்சத்திர பட்டாளங்கள் இருந்தால் சொல்லவா வேண்டும். அப்படித்தான் லியோ ஷூட்டிங் ஸ்பாட் எந்நேரமும் ஒரே குதூகலமாக இருக்கிறதாம்.

அந்த வகையில் விஜய் எப்போதுமே தன்னுடைய வேலைகளுக்கு என்று தனி தனியாக நேரம் ஒதுக்கி விடுவார். அதாவது இந்த நேரத்தில் சூட்டிங், இந்த நேரத்தில் சாப்பாடு என எல்லாவற்றையும் சரியாக ஷெட்யூல் போட்டு ஃபாலோ பண்ணுவார். எதற்காகவும் அவர் இந்த விஷயங்களை விட்டுக் கொடுக்க மாட்டார்.

Also read: விஜய்க்கு ஓகே சொன்ன கதையில ஹிட் கொடுத்த லியோ பட வில்லன்.. மொத்தத்தையும் போட்டுடைத்த இயக்குனர்

அப்படித்தான் தற்போது லியோ சூட்டிங் ஸ்பாட்டிலும் அவர் எல்லாத்தையும் சரியாக பின்பற்றி வருகிறாராம். இது ஒரு புறம் இருக்க மிஷ்கின் மற்றும் மன்சூர் அலிகான் இருவரும் படப்பிடிப்பு தளத்தையே சந்தோஷப்படுத்தி கொண்டிருக்கிறார்களாம். இவர்களின் அக்கப்போரை பார்த்து விஜய் செமையாக என்ஜாய் செய்து கொண்டு கலகலப்பாக இருக்கிறாராம்.

இப்படி பட குழுவினர் அனைவரும் ஒரே குடும்பம் போல் பேசி சிரித்து மகிழ்ந்தாலும் பட வேலையிலும் கவனமாக இருக்கின்றனர். அந்த வகையில் லோகேஷ் ஷூட்டிங் வேலைகள் அனைத்தையும் முடித்துவிட்டு அடுத்த கட்ட வேலைகளை தொடங்குவதில் ஆயத்தமாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Also read: 234 தொகுதி, 6000 நபர்கள்.. கலைஞர் பிறந்த நாளில் பக்கா ப்ளான் போட்டு காய் நகர்த்தும் விஜய்

Trending News