வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

நிஜத்திலும் நடிக்கப் போகும் விஜய்.. 400 கோடிகளை தூக்கி எறிவதற்கு பின்னால் உள்ள ராஜதந்திரம்

நடிகர் விஜய் கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு பத்தில் ஒரு நடிகர் என்று தான் புகழாரம் சூடி இருந்தார். அதன்பின் அட்லீ இயக்கத்தில் மெர்சல் படத்தில் நடித்த பின்பு இவருடைய ரேஞ்சே வேற லெவல்ல மாறிவிட்டது. இதை தொடர்ந்து அடுத்தடுத்து வரும் படங்களில் மூலம் இவர் முன்னேறுவதுடன் சேர்ந்து இவருடைய சம்பளமும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

அந்த வகையில் தற்போது விஜய்யின் சம்பளம் 200 கோடி வரை வாங்கும் அளவிற்கு உச்சத்தில் இருக்கிறார். இவருடைய சம்பளத்தை வைத்தே இவருடைய புகழ் எந்த அளவிற்கு உயர்ந்திருக்கிறது என்று ஈசியாக நிர்ணயித்து விட முடிகிறது. அத்துடன் ஒரு படத்திற்கு 200 கோடி என்கிற முறையில் இனிமேல் வருடத்திற்கு இரண்டு படங்கள் நடித்து ஒரே வருடத்தில் 400 கோடியே சம்பாதிக்க போகிறார்.

Also read: நன்றி மறந்து தூக்கி எறிந்த விஜய்.. உதவி கேட்ட விஜயகாந்துக்கு எள்ளளவும் மனம் இறங்காத இளைய தளபதி

இப்படி லாபத்தை சம்பாதிக்கும் இவர் இதற்கு மேலேயும் கோடியில் புரள வேண்டும் என்பதற்காக 400 கோடியே உதிரி தள்ளும் அளவிற்கு ஒரு முடிவு எடுத்திருக்கிறார். அதுதான் அரசியல் இதுவே இவருடைய ராஜதந்திரம் என்றே சொல்லலாம். விஜய்யின் ரசிகர்கள் இவர் இனிமேல் அரசியலுக்கு கூடிய விரைவில் வரப்போகிறார் என்று கூறி வருகிறார்கள்.

அப்படி வந்தால் இவருடைய சினிமா கேரியரை முழுவதும் விட்டு விட்டு தான் முழு நேரமும் அரசியலில் இறங்கி மக்களுக்காக சேவை செய்ய வேண்டும்.  இத்தனை கோடி சம்பாதிப்பதை விட்டுவிட்டு அரசியல் வந்தால் அது எப்படி சாத்தியமாகும் என்று சினிமா பிரபலங்கள் பலருக்கும் கேள்விகளை எழுப்பியது.

Also read: சரண்டர் ஆன வெங்கட் பிரபு.. விஜய் வந்ததும் மாஸ் ஹீரோவை கழட்டிவிட்ட பரிதாபம்

அதன் பின் தான் தெரிகிறது சினிமாவில் ஒரு வருடத்தில் 400 கோடி  சம்பாதிப்பதை விட அரசியலுக்கு வந்தால் 4 ஆயிரம் கோடி ஈசியாக சம்பாதித்து விடலாம் என்பது தான் இவருடைய அரசியலில் உள்ள ராஜதந்திரம். ஆனால் இது புரியாமல் இவருடைய ரசிகர்கள் இவர் அரசியலுக்கு வந்தால் எம்ஜிஆர் போல மக்களுக்கு நல்லது செய்வார். அதன் மூலம் நமக்கும் பதவிகள் கிடைக்கும் என்று ஆசையில் இருக்கிறார்கள்.

ஆனால் விஜய் இதுவரை சினிமாவை தவிர எந்த ஒரு அநியாயத்திற்கும் எதிராக குரல் எழுப்பியதே இல்லை. அப்படி இருக்கையில் அரசியலுக்கு வந்தால் மட்டும் நல்லது செய்யப் போகிறாரா என்ன. ரஜினி அரசியலுக்கு வருவார் என்று நம்பி இருந்த ரசிகர்கள் கடைசியில் ஏமாற்றம் அடைந்தது போல, விஜய்யும் நம்பி ஒரு கூட்டம் அரசியலுக்கு வருவார் என்று சுற்றி வருகிறது. இதற்கு காலம் தான் பதில் என்று சினிமா பிரபலங்கள் பலரும் பேசி வருகின்றனர்.

Also read: நடிப்பை தாண்டி ஷாப்பிங் மாலில் அதிகம் முதலீடு செய்யும் விஜய்.. மூக்கு மேல விரல் வச்சு பார்க்கும் திரையுலகம்

Trending News