புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

டாம் குரூஸுக்கே சவால் விடப் போகும் விஜய்.. பார்த்து உருட்டுங்க பாஸ் மிஸ் ஆச்சுன்னா தலைமுடி கூட மிஞ்சாது

விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் வாரிசு திரைப்படம் ஜனவரி மாதம் திரையரங்குகளை அலங்கரிக்க இருக்கிறது. இதற்கான எதிர்பார்ப்பு இப்போது அதிகமாக இருந்தாலும் அதைவிட அதிகமாக அவர் அடுத்ததாக நடிக்க இருக்கும் தளபதி 67 படத்திற்கு இருக்கிறது. விக்ரம் திரைப்படத்தின் மூலம் மிகப் பெரிய வெற்றியை தக்கவைத்துக் கொண்டிருக்கும் லோகேஷ் கனகராஜுக்கு நிச்சயம் இப்படம் ஒரு சவால் தான்.

ஏனென்றால் முந்தைய படத்திற்கு கொஞ்சம் கூட குறைவில்லாமல் இப்படத்தை ஆடியன்ஸ் ரசிக்கும் வகையில் கொடுக்க வேண்டும். அதற்காக அவர் இந்த படம் தொடர்பான ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செதுக்கி வருகிறாராம். சமீபத்தில் இப்படத்தின் பூஜை நடைபெற்றதை தொடர்ந்து விரைவில் இப்படத்தின் சூட்டிங் ஆரம்பிக்கப்பட இருக்கிறது.

Also read: விஜய்யை வாண்டடா வம்பு இழுக்கும் ப்ளூ சட்டை மாறன்.. ரெய்டிற்கு பிறகு புலி பாயுமா? பதுங்குமா?

அந்த வகையில் தற்போது இப்படத்தின் ப்ரோமோ சூட்டிங் முடிவடைந்துள்ளது. அதற்கு அடுத்து முதல் கட்ட காட்சிகள் தொடர்ச்சியாக 10 நாட்கள் நடைபெற இருக்கிறது. அதில் த்ரிஷா மற்றும் விஜய் சம்பந்தப்பட்ட பாடல் காட்சிகளும் படமாக்கப்பட இருக்கிறது. அதைத் தொடர்ந்து காஷ்மீர், லடாக் மற்றும் டெல்லியிலும் படப்பிடிப்பு நடத்தப்பட இருக்கிறது.

இந்நிலையில் இந்த படம் ரசிகர்கள் எதிர்பார்க்காத வகையில் அதிரடி காட்சிகள் நிறைந்த ஆக்சன் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. பொதுவாகவே லோகேஷ் கனகராஜின் திரைப்படங்கள் துப்பாக்கி சத்தம், அதிரடி சண்டை காட்சிகள் என சரவெடியாக இருக்கும். ஆனால் தளபதி 67 அதை எல்லாம் தூக்கி சாப்பிடும் வகையில் இருக்குமாம்.

Also read: அவர் பேச்சை கேட்டு அப்பாவை டீலில் விட்ட விஜய்.. சைலன்டாக வேலை பார்த்த மனைவி

மேலும் விஜய் இந்த படத்தில் ஹாலிவுட் ஹீரோ டாம் குரூஸுக்கு சவால் விடும் வகையில் ஒரு ஸ்டைல் ஆக்சனராக இருப்பாராம். ஹாலிவுட் பாக்ஸ் ஆபிஸ் நாயகனாக இருக்கும் டாம் குரூஸ் அதிரடி சண்டை காட்சிகளுக்கு பெயர் போனவர். அதேபோன்று அவருடைய படங்கள் ஒவ்வொன்றும் வேற லெவலில் இருக்கும். தற்போது லோகேஷ் கனகராஜ் அப்படிப்பட்ட ஒரு படத்தை தான் இயக்க இருக்கிறார்.

இதன் மூலம் தமிழ் சினிமாவை அவர் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வார் என்று பட குழுவினர் பெருமிதமாக கூறுகின்றனர். அந்த வகையில் ஏகப்பட்ட அதிரடி காட்சிகள் நிறைந்த இந்த படம் காஷ்மீர் உட்பட இந்தியா முழுவதிலும் இருக்கும் முக்கிய இடங்களில் படமாக்கப்பட இருக்கிறது. இப்படி இப்படத்துக்கு ஏகப்பட்ட பில்டப்புகள் கொடுக்கப்பட்டு வருகிறது. இதில் ஏதாவது ஒன்று மிஸ் ஆனாலும் அவ்வளவுதான் என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

Also read: குந்தவை மார்க்கெட்டை சரிக்க பக்கா பிளான் போட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்.. விட்ட இடத்தை பிடிக்க போராடும் த்ரிஷா

Trending News