வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ஜெயிலரால் வேகம் எடுக்கும் ரஜினி, ஆட்டத்தை ஆரம்பிக்கும் அஜித்.. சிக்கலில் மாட்ட போகும் விஜய்

Rajini, Ajith, Vijay: ஜெயிலர் ரிலீஸுக்கு முன்பு ரஜினியின் கேரியர் கேள்விக்குறியாக தான் இருந்தது. ஏனென்றால் இதற்கு முன்னதாக தொடர்ந்து விமர்சன ரீதியாக தோல்வி படங்களை கொடுத்த நிலையில் ஜெயிலர் படமும் இதே நிலைமையை சந்தித்தால் ரஜினியின் மார்க்கெட் வீழ்ச்சி அடைய வாய்ப்பு இருந்தது.

இப்போது ஜெயிலர் படத்தை ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் வசூல் ரீதியாகவும் சாதனை படைத்து வருகிறது. அதோடு மட்டுமல்லாமல் இந்த வெற்றியை தொடர்ந்து ரஜினி வேகம் எடுத்து அடுத்த இரண்டு படங்களையும் விரைந்து முடிக்க இருக்கிறார். அடுத்த ஆண்டு இந்த ரெண்டு படங்களையும் ரிலீஸ் செய்ய வேண்டும் என்ற முடிவுக்கு வந்து விட்டாராம்.

Also Read : 500 கோடி வடைக்கு தயாராகும் ஜெயிலர்.. அதிக வசூலால் வயிற்றெரிச்சலில் ப்ளூ சட்டை போட்ட வைரல் போஸ்ட்

இது மட்டும்இன்றி ஜெயிலர் வெற்றியால் ரஜினியின் சம்பளமும் உயர்த்தப்பட்டு இருக்கிறது. மற்றொருபுறம் அஜித்தின் விடாமுயற்சி இன்னும் தொடங்காமல் உள்ள நிலையில் அவருக்கு சில யோசனைகளை பலரும் கூறி வருகிறார்கள். அதாவது விடாமுயற்சி படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்பட இருக்கிறது.

இந்த சூழலில் பல பிரபலங்கள் அஜித்திடம் ரசிகர்களுக்காக நீங்கள் ஏதாவது செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர். அதாவது உங்கள் படத்தின் ஆடியோ லான்ச் வைக்க வேண்டும், அதில் நீங்களும் கலந்து கொள்ள வேண்டும். இதை தான் உங்கள் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்று கூறியுள்ளனர். இதற்கு அஜித் எதுவுமே பேசவில்லையாம்.

Also Read : ரஜினி, கமல் இடத்தை பிடிக்கும் அடுத்த தலைமுறை நடிகர்கள்.. பட்டமே வேண்டாம் என்று ஒதுங்கும் அஜித்

ஆகையால் அஜித் மறுப்பு தெரிவிக்காமல் உள்ளதால் விடாமுயற்சி படத்தின் ஆடியோ லான்ச் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அஜித் ரசிகர்கள் நிச்சயம் மகிழ்ச்சி அடைவார்கள் என்பதில் எள் அளவும் சந்தேகம் இல்லை. அதோடு ரஜினியும் இனி அரசியல் வேண்டாம் சினிமாவில் சாகும்வரை நான் தான் நம்பர் ஒன் நிலையில் இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்.

இவ்வாறு ரஜினி மற்றும் அஜித் இருவரும் சினிமாவில் முழுவீச்சாக இறங்கிய நிலையில் விஜய் சிக்கலில் மாட்ட போகிறார். ஏனென்றால் இப்போது சினிமாவில் விஜய் பாக்ஸ் ஆபீஸ் கிங் ஆக உள்ள நிலையில் இதை வைத்து தான் அரசியலிலும் இறங்க இருக்கிறார். இப்போது அஸ்திவாரத்தையே ஆட்டம் காண வைக்க ரஜினி மற்றும் அஜித் முழு வீச்சில் இறங்க உள்ளார்கள்.

Also Read : விஜய் குடும்பத்தில் குண்டு வைத்த குந்தவை.. சர்ச்சையை கிளப்பிய போட்டோ, உண்மை காரணம் இதுதான்

Trending News