ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

சினிமா ஆசையை விட்டுவிட்டு ஆடு புலி ஆட்டம் ஆடப்போகும் விஜய்.. சீக்ரட்டாய் நடக்கும் ஒத்திகை

Actor Vijay: விஜய்யின் லியோ படத்தை தொடர்ந்து, இவரின் அடுத்தடுத்த படங்களை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர் ரசிகர்கள். இந்நிலையில் சினிமா ஆசையை விட்டுவிட்டு ஆடுபுலி ஆட்டம் ஆடுவது போல இவர் செய்யும் செயல் தற்பொழுது குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.

ஒருபுறம் நடிப்பு, ஒரு புறம் அரசியல் என களம் இறங்க போகிறார் விஜய் என மக்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தி வந்தார். அதை குறித்து வெளியான தகவலும் மிகவும் வைரலாக பேசப்பட்டது. மேலும் சினிமாவை தவிர்த்து இவர் மேற்கொண்ட இளம் தலைமுறையினரின் ஊக்குவிக்கும் நிகழ்ச்சி பயங்கர ட்ரெண்டிங்கில் இருந்தது.

Also Read: கமலை பார்த்து மிரண்ட 160 கோடி வசூல் பட இயக்குனர்.. ஆண்டவரை பார்த்து தான் வளர்ந்தேன், வைரல் போட்டோஸ்

அதைத்தொடர்ந்து விஜய் அரசியலுக்காக மூன்று வருடம் நடிக்காமல் தேர்தலுக்காகவே வேலை செய்யப் போவதாகவும் தொடர்ந்து வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இது ஒரு புரளி எனவும் பேசப்பட்டது. ஆனால் விஜய்க்கு இது போன்ற எந்த எண்ணங்களும் அறவே இல்லை எனவும் சொல்லலாம்.

லியோ படத்திற்கு பிறகு ஒன்லைன் ஸ்டோரிக்கு ஓகே சொன்ன வெங்கட் பிரபு படம் மேற்கொள்ள விஜய்யின் சம்பளம் 100 கோடி கேட்டதாக கூறப்பட்டது. அவ்வாறு இருக்க ஏன் விஜய் சம்பளத்தை வேக வேகமாக முன்னரே அறிவித்தார் எனவும் கேள்வி முன்வைக்கப்படுகிறது.

Also Read: உலக நாயகனோடு சம்பவம் செய்ய போகும் விக்னேஷ் சிவன்.. மயிலு மகளை தூக்கிவிடும் கமல்

அவ்வாறு இருக்குமாயின், ஒருவேளை உண்மையிலேயே நடிக்காமல் இடைவெளி எடுத்தால் மக்களுக்காக 200 கோடியை விட்டுவிட்டு அரசியல் சேவையை மேற்கொள்கிறார் என தன் மீது பரிதாபம் ஏற்படும் என்பதற்காக இது போன்ற காரியங்களை செய்கிறாரோ எனவும் கூறப்படுகிறது.

இது போன்ற ஆடுபுலி ஆட்டத்தை மேற்கொள்ளும் விஜய் எது செய்தாலும் மக்கள் அறியாது நடைபெறப்போவதில்லை. விஜய்யை போற்றி பேசும் மக்கள், விஜய்யின் மூலமாக தான் இது போன்ற சீக்ரெட் பிளான்கள் செயல்படுகிறது என்று பல பிரபலங்கள் தன் ஆணித்தரமான கருத்தை கூறி வருகின்றனர். எது எப்படியோ, இவர் சதுரங்க ஆட்டத்தில் காய் நகர்த்தப்படுவது போல் இவரின் அடுத்த செயல் என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Also Read: 80-களில் இருந்தே கமல் படத்தை ஓகே பண்ணும் நபர்.. பரட்டை, சப்பானி கேவலமா இருக்குன்னு தூக்கி எறிந்த ஹீரோக்கள்

Trending News