Movie Leo: விஜய் தற்சமயம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள லியோ படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படம் அக்டோபர் மாதம் வெளியாக உள்ள நிலையில் வருகின்ற ஜூன் 22 ஆம் தேதி விஜய்யின் பிறந்தநாள் அன்று முதல் சிங்கிள் வெளியாகிறது. இதை அறிவிக்கும் விதமாக படக்குழு ஒரு போஸ்டர் வெளியிட்டது.
அதில் விஜய் சிகரெட் பிடிப்பது போல் போஸ்டர் வெளியாகி உள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். அதாவது விஜய்யின் துப்பாக்கி படத்தின் போஸ்டர் மற்றும் விளம்பரங்களில் புகைப்பிடிக்கும் காட்சி வைக்கப்பட்டிருந்தது. விஜய் பொறுத்த வரையில் எப்போதுமே அவருக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடும்ப ஆடியன்ஸ் இருக்கிறார்கள்.
Also Read : அரசியலுக்காக மாணவர்களை பகடைக்காயாக யூஸ் பண்ணும் விஜய்.. 50 வருடங்களுக்கு முன்பே செய்து அலுத்துப்போன நடிகர்
இவ்வாறு சிகரெட் பிடிப்பது போன்ற ஒரு தப்பான உதாரணத்தை குழந்தைகளுக்கு விஜய் சொல்லக்கூடாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் போன்றோர் கேட்டுக்கொண்டனர். அதன்படி விஜய் இனி புகைப்பிடிக்கும் காட்சியில் நடிக்க மாட்டேன் என வாக்குறுதி கொடுத்திருந்தார்.
ஆனால் அதன் பிறகும் சர்கார் போஸ்டரில் புகைபிடிக்கும் காட்சி இடம் பெற்றிருந்தது. இதற்கு கடுமையான எதிர்ப்பு நிலவிய நிலையில் தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து அந்த போஸ்டர் நீக்கப்பட்டது. இப்போது லியோ படத்தால் மீண்டும் சர்ச்சையில் சிக்கி உள்ளார் விஜய்.
Also Read : விஜய்யின் பின்னால் இருக்கும் பெரிய அரசியல் புள்ளி?. ஆடிப்போன மக்கள் இயக்க நிர்வாகிகள்
அதாவது இப்போது அரசியலில் இறங்க உள்ள விஜய் லியோ படத்தின் போஸ்டரின் மூலம் குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு சிகரெட் பிடிப்பதை வலியுறுத்துகிறாரா என சர்ச்சை வெடித்துள்ளது. எனவே லியோ படக்குழு தரப்பிலிருந்து இதற்கான பதிலுக்காக காத்திருக்கிறார்கள்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இதுபோன்று சிகரெட் பிடிக்கும் காட்சியில் நடிக்க மாட்டேன் என்று வாக்குறுதி கொடுத்து தற்போது வரை பின்பற்றி வருகிறார். இந்நிலையில் இப்போது லியோ பட இயக்குனர் லோகேஷால் விஜய் பெரும் சிக்கலில் மாட்டிக்கொண்டிருக்கிறார்.
Also Read : பொறுப்போடு அரசியல் செய்யுங்கள்.. கட்டளை போட்ட விஜய்